Published:Updated:

சேலம்: உதவி மையத்துக்கு வந்த கால்... நூற்பாலையில் கொத்தடிமைக் கொடூரம்; 35 வடமாநிலப் பெண்கள் மீட்பு!

கொத்தடிமை ( சித்திரிப்புப் படம் )

ஆத்தூர் அருகே நூற்பாலையில் பணியாற்றிய 35 வட மாநிலப் பெண்களை மீட்டு சொந்த ஊர்களுக்கு அதிகாரிகள் அனுப்பிவைத்தனர்.

சேலம்: உதவி மையத்துக்கு வந்த கால்... நூற்பாலையில் கொத்தடிமைக் கொடூரம்; 35 வடமாநிலப் பெண்கள் மீட்பு!

ஆத்தூர் அருகே நூற்பாலையில் பணியாற்றிய 35 வட மாநிலப் பெண்களை மீட்டு சொந்த ஊர்களுக்கு அதிகாரிகள் அனுப்பிவைத்தனர்.

Published:Updated:
கொத்தடிமை ( சித்திரிப்புப் படம் )

சேலம், ஆத்தூர் அருகே மணிவிழுந்தான் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை செயல்பட்டுவருகிறது. இங்கு உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வடமாநிலங்களைச் சேர்ந்த பெண்களும் பணியாற்றிவருகின்றனர். இவர்களில் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் என வடமாநிலங்களிலிருந்து வரும் பெண்கள் நூற்பாலைக்குச் சொந்தமான இடத்தில் தங்கவைக்கப்பட்டு பணியாற்றிவந்தனர். இதற்கிடையே அங்கு வேலை பார்க்கும் பெண்கள் உதவி மையத்துக்கு (பெண்கள் உதவி மைய எண் - 181) தொடர்புகொண்டு, நூற்பாலையிலுள்ள இளம்பெண்களுக்கு வேலை அதிகமாகக் கொடுத்து கொடுமைப்படுத்துவதாகப் புகார் தெரிவித்துள்ளனர். இதன்பேரில் தலைவாசல் தாசில்தார் வரதராஜன் தலைமையிலான வருவாய்த்துறையினர் நேற்று முன்தினம் இரவு அந்த நூற்பாலைக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த 35 பெண்கள் பணியாற்றிவருவது கண்டுபிடிக்கப்பட்டது.

கொத்தடிமை
கொத்தடிமை
சித்திரிப்புப் படம்

அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை செய்தபோது தங்களுக்கு அதிகமாக வேலை கொடுப்பதால் பணிச்சுமையால் அவதிக்குள்ளாகிவருவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் முறையாக உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்துவதாக முறையிட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு ஆத்தூர் ஆர்டிஓ சரண்யா நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். அப்போது பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களைச் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

அதன் பேரில் 35 வட மாநிலப் பெண்களுக்கு கொடுக்கவேண்டிய உரிய சம்பளத்தை, சம்பந்தப்பட்ட நூற்பாலை நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொடுத்து அவர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வேலை பார்த்த பெண்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதில் குழந்தைத் தொழிலாளர்கள் யாரும் இருக்கின்றனரா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.