Published:Updated:

உணவு குறித்து குறைகூறியதால் ஆத்திரம்; வாடிக்கையாளர் மேல் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய உணவக உரிமையாளர்

எண்ணெய்

ஒடிசாவில் உணவக உரிமையாளர் ஒருவர் வாடிக்கையாளர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உணவு குறித்து குறைகூறியதால் ஆத்திரம்; வாடிக்கையாளர் மேல் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய உணவக உரிமையாளர்

ஒடிசாவில் உணவக உரிமையாளர் ஒருவர் வாடிக்கையாளர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
எண்ணெய்

ஒடிசா மாநிலம், பாலிச்சந்திரபூர் கிராமத்தில் வசிப்பவர் பிரசன்ஜித் பரிதா (48). இவர் கடந்த சனிக்கிழமை, உள்ளூரில் செயல்பட்டுவரும் பிரவாகர் சாஹூவி என்பவரின் உணவகத்துக்கு உண்பதற்காக சென்றிருக்கிறார். பிரசன்ஜித் பரிதா ஹோட்டலில் உணவு சாப்பிட்ட பின்பு, ``சாப்பாடு சரியில்லை, விலைக்கு ஏற்றார்போல் உணவு ருசியாக இல்லை" என்று கூறியிருக்கிறார். இதையடுத்து, அவருக்கும் ஹோட்டல் உரிமையாளருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் கோபமடைந்த ஹோட்டல் உரிமையாளர் அங்கிருந்த கொதிக்கும் எண்ணெய்யை மொண்டு, வாடிக்கையாளர் பிரசன்ஜித் மீது ஊற்றியிருக்கிறார்.

உணவு
உணவு
DIXITH

அதில் பிரசன்ஜித்தின் முகம், கழுத்து, மார்பு, வயிறு மற்றும் கைகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, உடனடியாக அக்கம், பக்கத்தினர் பிரசன்ஜித் பரிதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய பாலிச்சந்திரபூர் காவல் நிலைய ஆய்வாளர் ரமாகாந்த முதுலி, ``தலைமறைவாகியுள்ள ஹோட்டல் உரிமையாளரை தேடி வருகின்றனர். அவர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. விரைவில் குற்றாவாளி கைது செய்யப்படுவார்’’ எனத் தெரிவித்தார்.