பா.ஜ.க-வின் மத்திய ஜவுளித்துறை மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ் இரானி, கோவாவின் அசாகோவில் `Silly Souls Cafe and Bar’ என்ற பெயரில் உணவகம் நடத்திவருகிறார். இந்த நிலையில், உணவகத்தின் மதுபான உரிமையைப் புதுப்பிக்க, இறந்தவரின் ஆவணத்தைச் சமர்ப்பித்தாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பாக, கோவாவின் கலால் கமிஷனர் நாராயண் எம் காட், ஜூலை 21 அன்று உணவகத்துக்கு ஒரு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். மேலும், வழக்கறிஞர் அயர்ஸ், "ரோட்ரிக்ஸ், உரிமத்தைப் பெற Silly Souls Cafe and Bar உரிமையாளர் ஜோயிஷ் இரானி சார்பில், பொய்யான தகவல்களுடன் மோசடி செய்து, இறந்தவரின் ஆவணங்களை ஜோடித்து சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஜூலை 29 -ம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
