Published:Updated:

`விடுதியில் நகை, பேன்ட், சட்டையுடன் பெண் எஸ்கேப்' - சென்னை அரசு அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!

வார விடுமுறையில் சந்தோஷமாக இருக்க, சென்னை கோயம்பேடு பஸ் நிலையப் பகுதி விடுதியில் அறை எடுத்த அதிகாரியுடன் தங்கியிருந்த பெண், நகை, பணம், டிரெஸ், செல்போன் ஆகியவற்றுடன் எஸ்கேப்பாகிய சம்பவம் குறித்து, ரகசியமாக விசாரணை நடந்துவருகிறது.

சென்னை கோயம்பேடு பஸ் நிலையம்
சென்னை கோயம்பேடு பஸ் நிலையம்

சென்னை கிண்டி பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி, கடந்த ஞாயிற்றுக்கிழமை கோயம்பேடு பகுதிக்கு வந்தார். அங்கு, வார விடுமுறையில் சந்தோஷமாக இருக்க அந்த அதிகாரி திட்டமிட்டார். இதற்காக, கோயம்பேடு பகுதியில் உள்ள விடுதியில் தங்கினார். அப்போது, அந்த அதிகாரியுடன் பெண் ஒருவரும் தங்கியுள்ளார். இருவரும் சந்தோஷமாக இருந்துள்ளனர். மதுபோதையில் அந்த அதிகாரி தூங்கிவிட்டார்.

கோயம்பேடு பஸ் நிலையம்
கோயம்பேடு பஸ் நிலையம்

காலையில் கண்விழித்தபோது, அந்த அதிகாரி அணிந்திருந்த டிரெஸ், நகைகள், செல்போன் என அனைத்தும் மாயமாகியிருந்தன. அதைப் பார்த்ததும் அந்த அதிகாரி அதிர்ச்சியடைந்தார். மாற்றுத் துணிகூட இல்லாமல் நிர்வாணமாக இருந்த அதிகாரி, என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார். பிறகு, விடுதியின் வரவேற்பு அறைக்குத் தகவல் தெரிவித்தார். பிறகு, அவர்கள் உதவியோடு நண்பர் ஒருவர் மூலம் அவருக்கு மாற்றுத் துணி கிடைத்தது. அதன்பிறகு அந்த அதிகாரி, அறையிலிருந்து வெளியில் வந்தார்.

இந்தத் தகவல் வெளியில் தெரிந்தால் அவமானம் எனக்கருதிய அவர், வீட்டுக்குச் சென்று அமைதியாக இருந்தார். பின்னர், தனக்குத் தெரிந்த காவல் துறையைச் சேர்ந்த ஒருவரிடம் விவரத்தைக் கூறியுள்ளார். கிண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முதலில் முடிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால், சம்பவம் நடந்த இடம் கோயம்பேடு என்பதால், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும்படி காவல்துறை நண்பர் அந்த அதிகாரிக்கு அறிவுரை கூறியுள்ளார்.

கோயம்பேடு
கோயம்பேடு

இதையடுத்து, கோயம்பேடு காவல் நிலையத்துக்கு வந்த அந்த அதிகாரி, தயங்கியபடி சம்பவத்தன்று நடந்த விவரத்தைக் கூறினார். அதோடு, 'இந்தத் தகவல் வெளியில் தெரிந்தால் குடும்பத்தில் பிரச்னை ஆகும்' என அன்பு வேண்டுகோளையும் விடுத்தார். இதனால் காவல் நிலையத்திலேயே இந்தப் புகார் ரகசியமாக விசாரிக்கப்பட்டுவருகிறது. சம்பவத்தன்று, அதிகாரியுடன் தங்கியிருந்த பெண் குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்துவருகின்றனர். அந்தப் பெண் சிக்கினால் மட்டுமே அடுத்தகட்ட விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

இந்தத் தகவல் குறித்து அண்ணாநகர் சரக காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, `அப்படியொரு சம்பவம் நடந்ததாக எனக்குத் தகவல் வரவில்லை'. மேலும், அதுதொடர்பாக விசாரிப்பதாகத் தெரிவித்தார். ஆனால், கோயம்பேடு காவல் நிலையத்தில் ரகசிய விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.

`` வெறும் ரெண்டாயிரம் ரூபாய்தான்! ’’ இரவுகளில் ’கூப்பிடும்’ கோயம்பேடு

இதுகுறித்து கோயம்பேடு போலீஸார் கூறுகையில், ``சம்பந்தப்பட்ட ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, வருவாய்த் துறையில் பணியாற்றியுள்ளார். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சந்தோஷமாக இருக்க கோயம்பேடு பகுதிக்கு அவர் வருவது வழக்கம். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் வந்தபோது, பெண் ஒருவரையும் அழைத்துக்கொண்டு விடுதிக்குச் சென்றுள்ளார். அதன்பிறகுதான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அறையில் தங்கியிருக்கும் ஆண் தூங்கும்போது, பாலியல் தொழில் செய்யும் பெண்கள், அவர்களின் உடைமைகள், நகைகள், டிரெஸ் ஆகியவற்றைத் திருடிக்கொண்டு செல்வது வாடிக்கை. ஏனெனில், அவ்வாறு சென்றுவிட்டால் உடனடியாகத் தங்களைப் பிடிக்க முடியாது. அதுபோலத்தான் இந்தப் பெண்ணும் செய்துள்ளார்" என்றனர்.