Published:Updated:

செயின் பறிக்க வந்த கொள்ளையன்... பைக்கை உதைத்து தள்ளிவிட்டு சிக்க வைத்த பெண்கள்!

கைது

சங்கிலியை பறிக்க முயன்றவரின் பைக்கை தங்கள் காலால் எட்டி உதைத்துள்ளனர். இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த பைக், நிலை தடுமாறி சாலையில் விழுந்தது. கீழே விழுந்த அந்த மூன்று பேரும் பைக்கை போட்டுவிட்டு தப்பி ஓடினர்.

செயின் பறிக்க வந்த கொள்ளையன்... பைக்கை உதைத்து தள்ளிவிட்டு சிக்க வைத்த பெண்கள்!

சங்கிலியை பறிக்க முயன்றவரின் பைக்கை தங்கள் காலால் எட்டி உதைத்துள்ளனர். இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த பைக், நிலை தடுமாறி சாலையில் விழுந்தது. கீழே விழுந்த அந்த மூன்று பேரும் பைக்கை போட்டுவிட்டு தப்பி ஓடினர்.

Published:Updated:
கைது

கன்னியாகுமரி மாவட்டம் காட்டாதுறை பகுதியை சேர்ந்தவர் சுபா. இவரின் உடன்பிறந்த சகோதரி சுஜி. இவர்கள் இருவரும் நேற்று இரவு அழகியமண்டபம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பள்ளி குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் சென்றுள்ளனர்.

பைக்கை உதைத்த பெண்
பைக்கை உதைத்த பெண்

நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், இரவு குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை காரில் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். சகோதரிகளான சுபா, சுஜி ஆகியோர் பைக்கில் அந்த காரை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுபா பைக்கை ஓட்ட, அவரின் தங்கை சுஜி பின்னால் அமர்ந்திருந்தார். இவர்கள் அழகியமண்டபம் பகுதியில் சென் றுகொண்டிருந்தபோது, அவர்களை பின் தொடர்ந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் 3 நபர்கள் வந்துள்ளனர்.

அதில் ஒருவர், சுஜியின் கழுத்தில் கிடந்த 11 பவுன் தங்க சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார். ஆனால், தங்க சங்கிலி அந்த நபரின் கையில் சிக்கவில்லை. கொள்ளையர்கள் தங்க சங்கிலியை பிடித்து இழுத்ததில் சுஜியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது.

கொள்ளையர்கள் வந்த பைக்
கொள்ளையர்கள் வந்த பைக்

உடனடியாக சுதாரித்துக் கொண்ட அந்த சகோதரிகள், சங்கிலியை பறிக்க முயன்றவரின் பைக்கை தங்கள் காலால் எட்டி உதைத்த்துள்ளனர். இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த பைக், நிலை தடுமாறி சாலையில் விழுந்தது.

கீழே விழுந்த அந்த மூன்று பேரும் பைக்கை போட்டுவிட்டு தப்பி ஓடினர். அங்கு நின்றவர்கள் இதைப் பார்த்து, தப்பி ஓடியதில் ஒருவரை விரட்டிப்பிடித்து கைகளை கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் தக்கலை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸார் அங்கு சென்று, பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த நபரை கைது செய்து, காவல் நிலையம் கொண்டுசென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பதும், குமரி மாவட்டத்தில் பலபகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.

ராஜேஷ்
ராஜேஷ்

அவருடன் பைக்கில் வந்த மற்ற இரண்டு பேரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கியுள்ளனர். தங்கச் சங்கிலியை பறிக்க வந்த திருடனின் பைக்கை உதைத்து போலீஸில் சிக்கவைத்த பெண்களின் செயலை, போலீஸாரும் பொதுமக்களும் பாராட்டினர்.