Published:Updated:

ஐந்து மணி நேரப் புதர்வாசம்... நகைகளுடன் சாமியார் கோலம்!

போலீஸ்
பிரீமியம் ஸ்டோரி
போலீஸ்

‘மார்க்கெட்’ சுரேஷ் மாட்டிக்கொண்ட கதை

ஐந்து மணி நேரப் புதர்வாசம்... நகைகளுடன் சாமியார் கோலம்!

‘மார்க்கெட்’ சுரேஷ் மாட்டிக்கொண்ட கதை

Published:Updated:
போலீஸ்
பிரீமியம் ஸ்டோரி
போலீஸ்
தீபாவளி பர்ச்சேஸுக்கு தி.நகரை மக்கள் மொய்ப்பதுபோல, திருடர்களுக்கும் கண் தி.நகரில்தான் இருக்கிறது. அப்படித் திருடச் சென்று சிக்கி, இப்போது புழல் சிறையில் இருக்கிறார்கள் பிரபல கொள்ளையர்களான `மார்க்கெட்’ சுரேஷும், சைதாப்பேட்டை வெங்கடேசனும். இது தொடர்பாக போலீஸ் சொல்லும் ஸ்டேட்மென்ட்டின் சாராம்சம் இதுதான்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஐந்து மணி நேரக் காத்திருப்பு...

சுரேஷ், வெங்கடேசன் இருவரும் அக்டோபர் 20-ம் தேதி காலை தி.நகர் மூசா தெருவுக்குச் சென்று, அங்குள்ள வீடுகளை நோட்டமிட்டனர். பங்களா ஒன்றை ஃபிக்ஸ் செய்தவர்கள், அன்றைய தினம் இரவே கொள்ளையடிக்க முடிவு செய்தார்கள். உடனே கையோடு கொண்டுவந்திருந்த இரும்புக்கம்பியை பங்களாவின் பின்பக்கமிருந்த முட்புதருக்குள் பதுக்கிவிட்டுச் சென்றனர். இரவு 7 மணிக்கு இருட்டியதும், அந்தப் புதருக்குள்ளேயே பதுங்கிக்கொண்டான் சுரேஷ்.

ஐந்து மணி நேரத்துக்கு மேல் புதரிலேயே பதுங்கியிருந்து, நள்ளிரவில் தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட சுரேஷ், சுவரேறி உள்ளே குதித்தான். முகமூடி, தொப்பி, கையுறைகளோடு முதல் மாடிக்குச் சென்ற சுரேஷ், இரும்புக்கம்பியால் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தான்.

‘மார்க்கெட்’ சுரேஷ்
‘மார்க்கெட்’ சுரேஷ்

அங்கிருந்த பீரோவை உடைத்த சுரேஷ், அதற்குள் குவியல் குவியலாக இருந்த தங்க நகைகளைப் பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்தான். இருந்தாலும் கவரிங் நகைகளாக இருக்குமோ என்று சந்தேகம் வரவே, பெரிய நகைகளை விட்டுவிட்டு, சின்னச் சின்ன நகைகளை மட்டும் எடுத்துக்கொண்டான். அதுவே இரண்டு கிலோ தேறியது. இவை தவிர 15 கிலோ வெள்ளிச் சாமான்களையும் அள்ளிக்கொண்டான். எல்லாவற்றையும் மூட்டை கட்டிக்கொண்ட சுரேஷ், வந்த வழியிலேயே வெளியேறி மறுபடியும் புதருக்குள் பதுங்கிக்கொண்டான். அதிகாலை 5 மணிக்கு, தனது கூட்டாளியான வெங்கடேசன் பைக்கில் வரவே இருவரும் கிளம்பினார்கள்.

சுரேஷ் - அமல்ராஜ்  வெங்கடேசன் - கங்கா தேவி
சுரேஷ் - அமல்ராஜ் வெங்கடேசன் - கங்கா தேவி

‘சாமியார்’ வெங்கடேசன்... ‘மீசை’ சுரேஷ்!

திருவள்ளூர் மாவட்டம், புட்லூரில் பழைய இரும்புக்கடை நடத்திவரும் சுரேஷின் காதலி கங்காதேவியின் வீட்டுக்கு சுரேஷ், வெங்கடேசன் இருவரும் நகை மூட்டையுடன் சென்று, அங்கு பங்கு பிரித்துக்கொண்டனர். அங்கிருந்து புறப்பட்ட வெங்கடேசன், தன் நண்பன் அமல்ராஜுடன் சேர்ந்துகொண்டான். காஞ்சிபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கத்தி லிருக்கும் அமல்ராஜின் மாமியார் வீட்டுக்கு இருவரும் சென்றனர். அங்கே ஏதோ பிரச்னை ஏற்படவே காவி வேட்டி, சட்டை வாங்கி அணிந்துகொண்டு நகைகளை மூட்டையாக்கிக் கட்டிக்கொண்ட வெங்கடேசன், நேராக திருவண்ணாமலைக்குச் சென்று சாமியார்களோடு சாமியாராக பிளாட்பாரத்தில் படுத்துக்கொண்டான். இன்னொரு பக்கம்... தன்னிடமிருந்த வைர நகைகளை வெள்ளி என நினைத்து விற்கச் சென்ற இடத்தில் திருவள்ளூர் மாவட்ட போலீஸிடம் சிக்கிக்கொண்டான் சுரேஷ்.

ஐந்து மணி நேரப் புதர்வாசம்... நகைகளுடன் சாமியார் கோலம்!

சிக்கவைத்த சிக்னல்!

இதற்கிடையில், கொள்ளைபோன பங்களாவின் சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வுசெய்தனர். அதில் ஓரிடத்தில், பாக்கெட்டுக்குள் இருந்த தங்க நகையைப் பிரிக்க மாஸ்க்கை எடுத்துவிட்டு பல்லால் கடித்துப் பிரித்திருக்கிறான் சுரேஷ். தடிமனான மீசையைவைத்து அடையாளம் கண்டுகொண்ட தனிப்படை காவலர் ஒருவர், ‘‘இது மார்க்கெட் சுரேஷ்’’ என்று சொல்லியிருக்கிறார்.

தொடர்ந்து அவர்களின் நெட்வொர்க்கை நூல் பிடித்துச் சென்ற தனிப்படை போலீஸ், வெங்கடேசனின் நண்பர் அமல்ராஜை அள்ளியது. அப்போது அவரது செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்தது... ‘‘டேய்... சுரேஷை அரெஸ்ட் பண்ணிட்டாங்கனு நியூஸ் வருது. நம்மளையும் நெருங்கிடுவாங்க. நீ மாட்டிக்காதே’’ என்று போனில் சொல்லியிருக்கிறான் வெங்கடேசன். போலீஸார் அந்த செல்போன் சிக்னலை ஆராய, அது திருவண்ணாமலையைக் காட்டியது. ஆனால், மீண்டும் அமல்ராஜ் எண்ணுக்கு அழைத்த வெங்கடேசன், ‘‘நான் கன்னியாகுமரி போறேன்’’ என்று சொல்லியிருக்கிறான். அமல்ராஜை போலீஸ் நெருங்கியிருக்கலாம் என்று யூகித்த வெங்கடேசன், போலீஸாரை திசைதிருப்பவே அப்படிச் சொல்லியிருக்கிறான். ஆனாலும், சுதாரித்துக்கொண்ட போலீஸார் செல்போன் சிக்னலை வைத்து வெங்கடேசனைச் சுற்றி வளைத்தனர். பிறகு கங்காதேவி, அமல்ராஜ், வெங்கடேசன் மூவரையும் சென்னைக்கு அழைத்துவந்து, அவர்களிடமிருந்து 1.4 கிலோ எடையுள்ள தங்க, வைர நகைகள் மற்றும் 11 கிலோ வெள்ளிப் பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.

ஐந்து மணி நேரப் புதர்வாசம்... நகைகளுடன் சாமியார் கோலம்!

இதுதான் போலீஸார் சொல்லும் ஸ்டேட்மென்ட். ஆனாலும், கிலோ கணக்கான தங்கம், வைரம், வெள்ளி நகைகளை இவ்வளவு பாதுகாப் பில்லாமல்தான் வைப்பார்களா... பங்களாவின் பூட்டையும் பீரோவையும் உடைத்தபோது கொஞ்சம்கூட செக்யூரிட்டி களுக்குச் சத்தம் கேட்கவில்லையா... கவரிங் என்று சந்தேகப்பட்டுத்தான் பெரிய நகைகளைத் திருடன் விட்டுச்சென்றானா என்றெல்லாம் இந்த வழக்கில் சந்தேகங்கள் எழுகின்றன. விடை தருமா காவல்துறை?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism