Published:Updated:

நகையை திருடிய வீட்டில் காரையும் திருடி தப்பியோடிய முகமூடி கொள்ளையர்கள்! - பெரம்பலூரில் அதிர்ச்சி

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நகரின் மையப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து திருடர்கள் தொடர் கைவரிசை காட்டியிருக்கிறார்கள்.

நகையை திருடிய வீட்டில் காரையும் திருடி தப்பியோடிய முகமூடி கொள்ளையர்கள்! - பெரம்பலூரில் அதிர்ச்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் நகரின் மையப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து திருடர்கள் தொடர் கைவரிசை காட்டியிருக்கிறார்கள்.

Published:Updated:
பெரம்பலூர்

திருட வந்த இடத்தில் நகைகளைக் கொள்ளையடித்ததோடு வீட்டிலிருந்த காரையும் எடுத்துச் சென்ற சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளைச் சம்பவங்கள்!
கொள்ளைச் சம்பவங்கள்!

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அருகேயுள்ள அம்மா பாளையம் கிராமத்தில் அரசு மதுபான கடையின் பின்புறத்தில் வசிப்பவர் பாண்டியன். இவர் மகன் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். பாண்டியன் மனைவி ராஜலெட்சுமியுடன் தனியே வசித்து வருகிறார். மேலும், கணவர் வெளிநாட்டில் இருப்பதால், பாண்டியனின் மகள் ரம்யாவும் அவருடன் வசித்து வருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெரம்பலூர் எஸ்.பி ஆபிஸ்
பெரம்பலூர் எஸ்.பி ஆபிஸ்

இந்த நிலையில், மூன்று நாள்களுக்கு முன்பு முகமூடி அணிந்த ஐந்து பேர்கொண்ட கும்பல், உட்புறம் தாழிடப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து பாண்டியனை இரும்பு ராடால் தாக்கியும், மனைவி மற்றும் மகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியும் அவறின் மகளிடம் நான்கரை பவுன் நகைகளைப் பறித்ததோடு கார் சாவியைப் பறித்துக்கொண்டு வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த அந்த காரில் தப்பிச் சென்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தொடர்பாகப் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து முகமூடி கும்பலை வலைவீசித் தேடி வந்தனர். இந்நிலையில், முகமூடி கும்பல் தப்பிச் சென்ற கார், சென்னை ஆர்.கே.நகரில் அனாதையாக நிற்பதாகப் பெரம்பலூர் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

கொள்ளை
கொள்ளை

அதன்பேரில் போலீஸார் காரை மீட்கச் சென்னை விரைந்துள்ளதாக போலீஸார் தரப்பில் சொல்லப்படுகிறது. மேலும் முகமூடி கும்பலைப் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பல இடங்களில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறி வருகிறது. கடந்த வாரம் கூட ஞாயிற்றுக்கிழமை வடக்கு மாதவி சாலையிலுள்ள நான்கு கடைகளின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் திருடப்பட்டுள்ளது. அதே போல், கல்லூரில் பேராசிரியரின் வீட்டில் 13 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கொள்ளை
கொள்ளை

நகரின் மையப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து திருடர்கள் தொடர் கைவரிசை காட்டியிருக்கிறார்கள். இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்களை இன்று வரையிலும் சிக்கவில்லை. தொடரும் கொள்ளை சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism