Published:Updated:

``தம்பியின் மரணத்துக்கு பழிக்குப்பழி; மதுபானம் வாங்கிக் கொடுத்து கொலை" - சென்னையில் நடந்த கொடூரம்

கொலை செய்யப்பட்ட ரமேஷ்
கொலை செய்யப்பட்ட ரமேஷ்

சென்னை விருகம்பாக்கத்தில் தம்பியின் மரணத்துக்குப் பழிக்கு பழிவாங்க வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில் சிக்கியவர், கொலை செய்யப்பட்டார்.

சென்னை வடபழனி குமரன் காலனி. 1-வது தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (25). இவர் மீது வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கு நிலுவையில் உள்ளது. ரமேஷின் நண்பன் அஜித். கடந்த மாதம் செம்மஞ்சேரி பகுதியில் உள்ள ஏரியில் ரமேஷ், அஜித் மற்றும் சிலர் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது நீரில் மூழ்கி அஜித் உயிரிழந்தார். இதுதொடர்பாக செம்மஞ்சேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அஜித்தின் மரணத்துக்குப் பழிக்குப்பழிவாங்க ரமேஷைக் கொலை செய்ய அஜித்தின் சகோதரர் திட்டமிட்டுள்ளார். அதன்படி அவரின் சகோதரர் தூண்டுதலின்பேரில் ரமேஷ் கொலை செய்யப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீஸ்
கொலை
கொலை
கொலை செய்யும்போது `ஆன்' ஆன செல்போன்; காட்டிக்கொடுத்த ஆடியோ! - சென்னைக் கடற்கரையில் நடந்த கொடூரம்

அஜித்தின் மரணத்துக்கு ரமேஷ் மற்றும் அவருடன் சென்ற சிலர்தான் காரணம் என அஜித்தின் அண்ணன் கருதியுள்ளார். மேலும் அவர், தன் தம்பி அஜித்தை ரமேஷ் மற்றும் அவரின் கூட்டாளிகள்தான் கொலை செய்துவிட்டதாக சந்தேகமடைந்துள்ளார். அதுதொடர்பாக அஜித்தின் அண்ணனுக்கும் ரமேஷுக்கும் முன்விரோதம் இருந்துவந்துள்ளது. இந்தச் சூழலில் விருகம்பாக்கத்தில் ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குடியிருப்பு அருகில் உள்ள காலி இடத்தில் ரமேஷ் நேற்றிரவு சிலருடன் மது அருந்தியுள்ளார். போதையிலிருந்த ரமேஷை 6 பேர் கொண்ட கும்பல் முகம், கை, கால், மற்றும் மார்பு ஆகிய பகுதிகளில் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தக் கொலைகுறித்து தகவல் கிடைத்ததும் உதவி கமிஷனர் ஆரோக்கியபிரகாசம் மேற்பார்வையில் விருகம்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். ரமேஷின் சடலத்தை கைப்பற்றிய போலீஸார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது ரமேஷ் கொலை செய்யப்பட்ட காட்சிகள் பதிவாகியிருந்தன.

கொலை
கொலை
மாதிரிப் படம்

அதன்அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து நம்மிடம் பேசிய விருகம்பாக்கம் போலீஸார், ``கொலை செய்யப்பட்ட ரமேஷ் மீது திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தச் சூழலில் அவரின் நண்பரான அஜித் கடந்த ஏப்ரல் மாதம் ஏரியில் மூழ்கி உயிரிழந்தார். அஜித்தின் மரணத்துக்கு பழிக்குப்பழிவாங்க ரமேஷை கொலை செய்ய அஜித்தின் சகோதரர் திட்டமிட்டுள்ளார். அதன்படி அவரின் சகோதரர் தூண்டிதலின்பேரில் ரமேஷ் கொலை செய்யப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலையில் தொடர்புடைய ஒருவரிடம் விசாரணை நடந்துவருகிறது. தலைமறைவாக உள்ளவர்களைத் தேடி வருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு