Published:Updated:

வீடு புகுந்து தொழிலதிபரைக் கொன்று 100 பவுன் நகை கொள்ளை - புதுக்கோட்டையில் துணிகரம்

கொலை

ஆயிஷா பேபியிடம் ரத்தக்கறையான கத்தியைக் காட்டி மிரட்டி, பீரோ சாவியை வாங்கிக்கொண்டவர்கள், அவரை அங்கேயே கட்டிப்போட்டு, பீரோவில் இருந்த 100 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.

வீடு புகுந்து தொழிலதிபரைக் கொன்று 100 பவுன் நகை கொள்ளை - புதுக்கோட்டையில் துணிகரம்

ஆயிஷா பேபியிடம் ரத்தக்கறையான கத்தியைக் காட்டி மிரட்டி, பீரோ சாவியை வாங்கிக்கொண்டவர்கள், அவரை அங்கேயே கட்டிப்போட்டு, பீரோவில் இருந்த 100 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.

Published:Updated:
கொலை

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே ஆவுடையார்பட்டினத்தைச் சேர்ந்தவர் முகமது நிஜாம். கறம்பக்குடியில் ஆப்டிகல்ஸ் கடை, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுவந்தார். இவரின் மனைவி ஆயிஷா பேபி. இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகன்கள் இருவரும் கறம்பக்குடியில் தங்கி ஆப்டிகல்ஸ் கடையை நிர்வகித்துவருகின்றனர். மகள் திருமணமாகி தனியாக வசித்துவருகிறார். ஆவுடையார் பட்டினத்தில் கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்துவந்தனர்.

இந்த நிலையில், வழக்கம்போல் நேற்றிரவு பள்ளிவாசல் சென்று தொழுகையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த முகமது நிஜாம், வீட்டுக்கு வெளியே அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது, அவர் எதிர்பார்க்காத வகையில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், கண் இமைக்கும் நேரத்தில் முகமது நிஜாமைக் கழுத்தைக் கத்தியால் அறுத்துவிட்டு, வீட்டுக்குள்ளே புகுந்தனர். கழுத்து அறுக்கப்பட்ட முகமது நிஜாம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.

வீடு புகுந்து தொழிலதிபரைக் கொன்று 100 பவுன் நகை கொள்ளை - புதுக்கோட்டையில் துணிகரம்

வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் ஆயிஷா பேபியிடம் ரத்தக்கறையான கத்தியைக் காட்டி மிரட்டி, பீரோ சாவியைக் கேட்டுள்ளனர். சாவியை வாங்கிக்கொண்டவர்கள், உடனே ஆயிஷா பேபியை அங்கேயே கட்டிப்போட்டு, பீரோவில் இருந்த 100 பவுன் நகை, 20ஆயிரம் ரொக்கப்பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர். மெல்ல மெல்ல கயிற்றை அறுத்து வெளியே வந்த ஆயிஷா பேபி, செல்போன் மூலம் உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார். முகமது நிஜாம் கழுத்து அறுபட்டுக் கிடந்தது கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்து மணமேல்குடி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, போலீஸார் அங்கு விரைந்து சென்று தடயங்களைச் சேகரித்தனர். இதையடுத்து, மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபன் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து வழக்கு பதிவுசெய்த மணமேல்குடி போலீஸார், தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism