Published:Updated:

அழகு நிலையத்தில் கத்திமுனையில் மிரட்டி நகை, பணம் கொள்ளை... போலீஸ் விசாரணையில் சிக்கிய இளைஞர்!

பட்டாக்கத்தியைக் காட்டி கொள்ளை

அழகு நிலையத்தில் நுழைந்த சிலர் பட்டாக்கத்தியைக் காட்டி கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அழகு நிலையத்தில் கத்திமுனையில் மிரட்டி நகை, பணம் கொள்ளை... போலீஸ் விசாரணையில் சிக்கிய இளைஞர்!

அழகு நிலையத்தில் நுழைந்த சிலர் பட்டாக்கத்தியைக் காட்டி கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
பட்டாக்கத்தியைக் காட்டி கொள்ளை

சென்னை அருகிலுள்ள நொளம்பூர், எஸ்.பி நகர்ப் பகுதியில் ஒரு தனியார் அழகு நிலையம் செயல்பட்டுவருகிறது. இந்தக் கடைக்கு, கடந்த 8-ம் தேதி மாலை, வாடிக்கையாளர்கள்போல ஆறு பேர்கொண்ட ஒரு கும்பல் உள்ளே நுழைந்தது. அங்கு கடையில் பணியாற்றிக்கொண்டிருந்த ஐந்து பெண் ஊழியர்கள் உட்பட ஏழு பேரிடம் பட்டாக்கத்தியைக் காட்டிஅந்தக் கும்பல் மிரட்டியிருக்கிறது.

அழகு நிலையத்தில் நுழையும் கொள்ளையர்கள்
அழகு நிலையத்தில் நுழையும் கொள்ளையர்கள்
Durairaj G

இந்தக் கொள்ளைக் கும்பல் கடையிலிருந்தவர்களிடம் எட்டு விலை உயர்ந்த செல்போன்கள், கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க நகை, கல்லாவில் இருந்த 7,500 ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக, கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த நொளம்பூர் பகுதி போலீஸார், கடையில் பதிவான சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு நடத்தினர். அதில் ஆறு பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் செல்வது பதிவாகியிருந்தது. மேலும், அந்தக் காட்சிகளை வைத்து கொள்ளையர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு அந்தக் கும்பலைச் சேர்ந்த சிட்லபாக்கம் ஆகாஷ் (19) என்பவரை போலீஸார் கைதுசெய்தனர்.

சிக்கிய கொள்ளையன்
சிக்கிய கொள்ளையன்

அவரிடம் நடத்திய விசாரணையில், ``அழகு நிலையங்களில் பெண்கள் மட்டும் வேலை பார்ப்பதால் அவர்களை எளிதாகக் கத்தியை மிரட்டிக் கொள்ளையடித்துவிட முடியும். எனவே, புறநகர்ப் பகுதியிலுள்ள அழகு நிலையங்களைக் குறிவைத்து கொள்ளையில் ஈடுபட்டோம்" எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், தலைமறைவாக இருக்கும் ஐந்து பேரைத் தனிப்படை காவலர்கள் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.