Published:Updated:

சென்னை: துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டல்... ரயில்வே ஊழியரைக் கட்டிப்போட்டு ரூ.1.32 லட்சம் கொள்ளை!

திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையம்
News
திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையம்

சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்ட்டர் ஊழியரைத் துப்பாக்கிமுனையில் மிரட்டிய கொள்ளையர்கள், பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் அதிகாலை முதல் பயணிகள் கூட்டம் அலைமோதும். டிக்கெட் எடுக்க பயணிகள் கவுன்ட்டருக்குச் சென்றபோது அது மூடியிருந்தது. அதனால் டிக்கெட் எடுக்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். நீண்டநேரமாக டிக்கெட் கவுன்ட்டர் மூடப்பட்டிருந்ததால், அது தொடர்பாக ரயில்வே காவல் நிலைய போலீஸாரிடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக ரயில்வே போலீஸார் அங்கு வந்தனர். அப்போது கதவு உடைக்கப்பட்டிருந்தது. கவுன்ட்டருக்குள் ரயில்வே ஊழியர் ஒருவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தார். அவரின் வாயையும் கொள்ளையர்கள் சத்தம் போட முடியாத அளவுக்கு அடைத்திருந்தனர்.

திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் விசாரணை
திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் விசாரணை

அதைப் பார்த்த ரயில்வே போலீஸார் உடனடியாக ஊழியரை மீட்டு என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போது மூன்று பேர் கவுன்ட்டருக்குள் வந்து, துப்பாக்கிமுனையில் தன்னை மிரட்டி கை கால்களைக் கட்டிப்போட்டுவிட்டு பணத்தைக் கொள்ளையடித்துவிட்டுச் சென்றதாகத் தெரிவித்தார். உடனடியாக இந்தத் தகவல் காட்டுத் தீபோலப் பரவியது. பின்னர் ரயில்வே ஊழியர் டிக்காராம் புகாரளித்தார். அதன்பேரில் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு போலீஸார் தடயங்களைச் சேகரித்துவருகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கொள்ளைச் சம்பவம் தொடர்பாக திருவான்மியூர் ரயில்வே போலீஸார் 392, 353, 442, 342 ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ரயில்வே எஸ்.பி அதிவீரபாண்டியன் தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன. இன்ஸ்பெக்டர்கள் வைரவன், ஷாலினி ஆகியோர் இரண்டு குழுக்களாக ரயில் நிலையத்துக்கு வெளியே உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு மேற்கொண்டு குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.

டிக்கெட் கவுன்ட்டர்
டிக்கெட் கவுன்ட்டர்

இது குறித்து ரயில்வே போலீஸார் கூறுகையில், ``டிக்கெட் கவுன்ட்டருக்குள் மூன்று பேர் வந்ததாக ரயில்வே ஊழியர் டிக்காராம் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களில் இரண்டு பேரின் கையில் துப்பாக்கிகள் இருந்துள்ளன. சத்தம் போட்டால் சுட்டுவிடுவதாக அவர்கள் ரயில்வே ஊழியரை மிரட்டியிருக்கின்றனர். அந்த நேரத்தில் டிக்கெட் கவுன்ட்டரில் மக்கள் நடமாட்டம் இல்லை. மேலும் ரயில்வே ஊழியரைக் கட்டிப்போட்டுவிட்டு 1,32,500 ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம். கொள்ளையர்களைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன" என்றனர். சென்னையில் நடைபெற்ற இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.