Published:Updated:

`பின்பக்க ஜன்னல்; முகமூடி மனிதர்!’- திருச்சி பெல் கூட்டுறவு வங்கிக்கு அதிர்ச்சி கொடுத்த கொள்ளையர்கள்

திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் உள்ள தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கியில் சுமார் ரூ 1.50 கோடி பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பெல் நிறுவனம்
திருச்சி பெல் நிறுவனம்

கடந்த மாதம் திருச்சி லலிதா நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் தீரும் முன்னே மேலும் ஒரு கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது திருச்சி போலீஸாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஜன்னல்
ஜன்னல்

திருச்சியில் செயல்பட்டு வரும் பெல் நிறுவனம் சுமார் 18,000 ஊழியர்கள் பணியாற்றும் பெரிய நிறுவனம். பெரும் நிலப்பரப்பில் பரந்து கிடக்கும் இந்த நிறுவன வளாகத்துக்கு குடியிருப்புகள் நிர்வாக அலுவலகம் உள்ளிட்டடவை அடக்கம். இதில் பெல் நிர்வாகக் கட்டடம் 24 மணி நேரமும் செயல்படும் முக்கியமான கட்டடம். இந்தக் கட்டடத்தின் ஒரு பகுதியில்தான் தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது.

``கவலைப்படாதே, தப்பித்துப் போ!''-போதைக் கும்பலிடமிருந்து காதலியை காப்பாற்றிய காதலனின் கடைசி நிமிடம்

நிர்வாக அலுவலகத்தில் பணியாற்றும் சுமார் 3,000 பணியாளர்களின் வங்கிக் கணக்கு இந்த வங்கியில்தான் இருக்கிறது. இந்த நிலையில், சம்பள நாளான இன்று காலை வங்கியைத் திறந்த ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ரூ.1.43 கோடி ரூபாய் இருந்த பெட்டியைக் காணாததே அந்த அதிர்ச்சிக்குக் காரணம். இதைத் தொடர்ந்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

உடனடியாக போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த குறிப்பிட்ட வங்கிக் கிளையில் 5 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். கொள்ளைச் சம்பவம் தொடர்பான வங்கியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துவருகின்றனர். அதில் முகமூடி அணிந்திருந்த நபர் ஒருவர் பெட்டியுடன் காரில் ஏறிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

சிசிடிவி ஸ்கெட்ச், நெட்ஃப்ளிக்ஸ் மாஸ்க், ஃபேஸ் சர்ஜரி! `லலிதா’ முருகனின் திடுக் திட்டங்கள்

இந்த நிலையில், முதற்கட்ட விசாரணையில், ஒரு நபர் வங்கிக்குள் பின்பக்க ஜன்னலை உடைத்துச் சென்று பணம் இருந்த பெட்டியை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் இருவர் ஈடுபட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பெல் நிறுவனம்
பெல் நிறுவனம்

இன்று சம்பள நாள் என்பதால், தொழிலாளர்கள் அதிக அளவில் பணம் எடுக்க வருவார்கள் என்பதால், நேற்று கிளை வங்கிக்கு மெயின் வங்கியிலிருந்து பணம் கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இரவு சுமார் 8.30 மணிக்கு இந்தக் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, வங்கியில் மற்ற லாக்கர்களில் இருந்த பணத்தை சரிபார்க்கும் பணியும் தீவிரமாக நடந்துவருகிறது. போலீஸார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மோப்ப நாய்
மோப்ப நாய்

இந்த விவகாரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள நாய், ஏற்கெனவே லலிதா நகைக்கடை கொள்ளை வழக்கில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து நடக்கும் கொள்ளைச் சம்பவங்களால் திருச்சி நகரம் பரபரத்துப் போய் கிடக்கிறது.