Published:Updated:

ரோஹினி நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு! -நண்பர்களாக இருந்த கிரிமினல்கள் எதிரியானது எப்படி? | பகுதி 3

ஜிதேந்தர்-தில்லு
News
ஜிதேந்தர்-தில்லு

டெல்லி ரோஹினி நீதிமன்றத்தில் கிரிமினல்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்வது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள மாவட்ட ரோஹினி நீதிமன்றம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அதுவும் நீதிமன்றத்துக்கு வரும் வழக்கறிஞர்களும் சரி, பொதுமக்களும் சரி... உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் வருகின்றனர். அந்த அளவுக்கு எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. டெல்லி நீதிமன்றத்தில் சாதாரண ஒரு பகையை தீர்த்துக்கொள்ள அரசு விஞ்ஞனியே வெடிகுண்டு வைத்த சம்பவத்தை கடந்த இரு பகுதிகளில் பார்த்தோம்.

அந்த இரு பகுதிகளையும் படிக்க, கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்க...

பகுதி 1:

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பகுதி 2:

அதற்கு முன்பு இதே நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிறகும் கூட நீதிமன்றத்தில் போதிய அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத காரணத்தால் தான் இந்த வெடிகுண்டு தாக்குதல் எளிதில் நடந்துள்ளது. டெல்லி துப்பாக்கிச் சூட்டை நடத்திய தில்லு என்ற கிரிமினலுக்கும் ஜிதேந்தர் கோகி கூட்டத்திற்கும் நீண்ட நாட்களாக கேங்வார் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஒருவரை ஒருவர் தாக்கி 25 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜிதேந்தரும், சுனின் மான் என்ற தில்லுவும் சிறு வயது முதலே நண்பர்கள் ஆவர்.

ஜிதேந்தர்-தில்லு
ஜிதேந்தர்-தில்லு

அவர்கள் மாணவர்களாக இருக்கும் போதே அரசியலிலும் இருந்தனர். இப்போது கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் பரம விரோதிகளாக இருக்கின்றனர். ஜிதேந்தர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி என 19-க்கும் அதிகமான வழக்குகள் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருக்கிறது. ஜிதேந்தரால் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் போலீஸில் புகார் செய்யக்கூட முன்வரவில்லை. ஜிதேந்தர், தில்லு ஆகியோர் இடையே டெல்லி, ஹரியானாவை யார் கன்ட்ரோலில் வைத்திருப்பது என்பதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வாலிபால் போட்டியில் கலந்து கொண்டு பல வெற்றிகளை பெற்ற ஜிதேந்தரின் வாழ்க்கை பயணத்தை அவரின் கல்லூரி வாழ்க்கை மாற்றி அமைத்தது. டெல்லியில் உள்ள ஸ்வாமி ஸ்ரத்தானந்தா கல்லூரியில் ஜிதேந்தரும், தில்லுவும் சேர்ந்து படித்தனர். அவர்கள் எப்போதும் பிரிக்க முடியாத நண்பர்களாக கல்லூரியில் சுற்றித்திரிந்தனர். ஆனால் கல்லூரி தேர்தல் அவர்கள் இரண்டு பேரையும் பிரித்தது. தேர்தலில் இரண்டு பேரும் வேறு வேறு அணிகளை ஆதரித்தனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``இருவரும் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் தங்களுக்கு வேண்டிய வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்தனர். இருவரும் நண்பர்களாக இருந்த போதிலும் என்ன காரணத்திற்காக வேறு வேறு வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுத்தனர் என்று விசாரணையில் இருவருமே சொல்ல மறுத்துவிட்டனர். ஆனால் இந்த தேர்தல்தான் இருவரையும் உள்ளூர் கிரிமினல்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வகை செய்தது. மாணவரணி தேர்தல் வன்முறை தொடர்பாக ஜிதேந்தர் மீது 2008-ம் ஆண்டு டெல்லி போலீஸார் முதல் முறையாக வழக்கு பதிவு செய்தனர். 2013-ம் ஆண்டு வரை ஜிதேந்தர் சிறுசிறு குற்றங்களில் மட்டுமே ஈடுபட்டு வந்தார். அதுவும் டெல்லிக்கு வெளியில்தான் தனது வேலையை காட்டிக்கொண்டிருந்தார்.

டெல்லி ரோஹினி கோர்ட்
டெல்லி ரோஹினி கோர்ட்

ஆனால் 2013-ம் ஆண்டு வரை டெல்லியில் ஆதிக்கம் செலுத்தி வந்த ரெளடி நீது தபோடியா 2013-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். நீதுவுக்கு போட்டியாக விளங்கிய நீரஜ் பவானா 2015-ம் ஆண்டு டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டான். இரண்டு பேரும் இல்லாத நிலையில் ஜிதேந்தர் படிப்படியாக டெல்லியில் தனது ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தான்.

மற்றொரு புறம் தில்லு தனது பகுதிக்குள் கிரிமினல் வேலைகளில் ஈடுபட்டு அவரும் தனது எல்லையை விரிவுபடுத்திக்கொண்டு வந்தான். 2013-ம் ஆண்டு ஜிதேந்தர் டெல்லி பல்கலைக்கழக மாணவர் குல்தீப் என்பவரை சந்தித்தார். குல்தீப் மிகவும் படித்தவர். ஜிதேந்தருக்கு எப்படி இண்டர்நெட் கால்களை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து குல்தீப் கற்றுக்கொடுத்தார். அதன் பிறகு இருவரும் சேர்ந்து எப்படி தில்லு கூட்டத்தை ஒழித்துக்கட்டினர் என்பது குறித்து அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

(தொடரும்..)