சென்னையைச் சேர்ந்த மயிலாப்பூர் சிவக்குமார் ``ஏ-பிளஸ்" வகை ரௌடி. இவர் மீது கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து என 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. சிறையிலிருந்து பெயிலில் வந்த சிவக்குமார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்கு மாம்பலம் அருகே மர்ம கும்பலால் கொடூரமான முறையில் வெட்டி கொல்லப்பட்டார். கடந்த 2001-ம் ஆண்டு தோட்டம் சேகரின் கொலைக்குப் பலி தீர்க்க சிவக்குமார் கொலை நடந்ததாகக் கூறப்பட்டது.

அந்த பகுதியிலிருந்த சி.சி.டி.வி பதிவுகளை வைத்து போலீஸார் நடத்திய விசாரணையில், இந்த கொலைக்கு மூலக் காரணமாக இருந்தது தோட்டம் சேகரின் மகன் ரௌடி அழகு ராஜா என்பது கண்டறியப்பட்டது. இவர் கூலிப்படையினரின் உதவியோடு இந்த கொலையைச் செய்து முடித்தது விசாரணையில் தெரியவந்தது. சிவக்குமார் கொலைவழக்கில் கள்ளக்குறிச்சியில் சரணடைந்த அழகு ராஜா சிறையிலிருந்தார். பின்னர் பெயிலில் வெளியே வந்தவர் தலைமறைவாகிவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தலைமறைவாக உள்ள ரௌடிகளைப் பிடிக்க வேண்டும் என்று சமீபத்தில் டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். இந்த சூழலில், கடந்த ஆறு மாதங்களாகத் தலைமறைவாக இருந்த ரௌடி அழகு ராஜா கடலூர் அருகில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அதையடுத்து, தீவிர குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் அழகு ராஜாவை நேற்று இரவு கைது செய்தனர்.