Published:Updated:

திருச்செங்கோட்டில் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி தனபால்!- ஜாமீனில் வந்தவருக்கு நேர்ந்த கதி

தனபால்
தனபால் ( எம்.விஜயகுமார் )

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பட்டப் பகலில் பிரபல ரவுடி நொண்டி தனபால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. விசைத்தறி வைத்துள்ளார். இவருடைய மகன் நொண்டி தனபால் என்கிற தனபால்(36). இவர் இப்பகுதியில் பிரபல ரவுடியாகச் சுற்றித் திரிந்தார். இவர் மீது கொலை, கொள்ளைப் பிரிவுகளில் பல வழக்குகள் பல்வேறு காவல்நிலையங்களில் நிலுவையில் இருக்கின்றன. திருச்செங்கோட்டில் பிரபல ரவுடி வளத்தி மோகன் கொலை வழக்கிலும் இவர் கைது செய்யப்பட்டார்.

கொலை
கொலை

மீண்டும் தனபால் 2018 -ம் ஆண்டு சூரியம்பாளையத்தைச் சேர்ந்த குப்பன் என்கிற நிதி நிறுவன அதிபரைக் கொலை செய்த வழக்கில் முதல் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவர் திருமணமானவர். ஆனால், மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் தனபாலும், அவரோடு இரண்டு பேரும் பள்ளிப்பாளையம் ஆனங்கூர் அருகே கிளாக்காடுப் பகுதியில் உள்ள பன்றி இறைச்சிக் கடைக்கு வந்திருக்கிறார்கள்.

இவர்கள் மூன்று பேரும் பன்றி இறைச்சிக் கடைக்குப் பின் புறத்தில் மது அருந்திக்கொண்டிருக்கிறார்கள். திடீரென அலறல் சத்தம் கேட்டதையடுத்து பன்றிக் கடைக்காரர் பாலன் மற்றும் சிலர் சென்று பார்த்த போது வெட்டுக்காயத்துடன் தனபால் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். தனபாலோடு வந்த இரண்டு பேரும் மாயமாகி இருந்தார்கள். இதைக் கண்ட பன்றிக்கடைக்காரர் பாலனும் கடையை மூடிவிட்டு ஓடிவிட்டார்.

கொலை
கொலை

இத்தகவல் தனபாலின் தந்தை பெரியசாமிக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் சம்பவ இடத்திற்கு வந்து மகன் வெட்டுப்பட்டு இறந்து கிடப்பதைப் பார்த்துக் கதறி அழுதார். பின்னர் இதுகுறித்து பள்ளிப்பாளையம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளிப்பாளையம் டி.எஸ்.பி சண்முகம் நேரில் வந்து பார்வையிட்டார். தனபால் எதற்காகக் கொல்லப்பட்டார்... பழிக்கு பழியாகக் கொன்றார்களா... யார் கொன்றது.. எனப் பல கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

அடுத்த கட்டுரைக்கு