Published:Updated:

தஞ்சை: உயிருக்கு பயந்து வெளியூரில் இருந்த ரௌடி; நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது வெட்டிக் கொலை!

கொலைசெய்யப்பட்ட சுவாமிநாதன்

அண்மையில் நீதிமன்றத்தில் ஆஜாராக வந்த சுவாமிநாதனை ஒரு கும்பல் சுந்தரபாண்டியன் நகர்ப் பகுதியில் வெட்டிக் கொலைசெய்தது. இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த கள்ளப்பெரம்பூர் போலீஸார் ஆறு பேரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தஞ்சை: உயிருக்கு பயந்து வெளியூரில் இருந்த ரௌடி; நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது வெட்டிக் கொலை!

அண்மையில் நீதிமன்றத்தில் ஆஜாராக வந்த சுவாமிநாதனை ஒரு கும்பல் சுந்தரபாண்டியன் நகர்ப் பகுதியில் வெட்டிக் கொலைசெய்தது. இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த கள்ளப்பெரம்பூர் போலீஸார் ஆறு பேரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Published:Updated:
கொலைசெய்யப்பட்ட சுவாமிநாதன்

தஞ்சாவூர் அருகேயுள்ள பொத்தேரி பாளையம், கங்கா நகரைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் (36). ரௌடியான இவர்மீது மூன்று கொலை வழக்குகள் உட்பட பல வழக்குகள் இருக்கின்றன. கடந்த வருடம் இவர் அண்ணன் விஜய் என்பவரைச் சிலர் வெட்டிக் கொலைசெய்தனர். இதனால் சுவாமிநாதனுக்கும் ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தில், அவர் அம்மா சுமாமிநாதனை புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியிலுள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி அங்கேயே இருக்கவைத்தார்.

போலீஸ் கைதுசெய்துள்ள ஆறு பேர்
போலீஸ் கைதுசெய்துள்ள ஆறு பேர்

சுவாமிநாதன், அவ்வப்போது தன் மேலுள்ள வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராவது வழக்கம். அப்போது சில நாள்கள் தன் அம்மா வீட்டில் தங்கிச் செல்வார். இந்த நிலையில், அண்மையில் நீதிமன்றத்தில் ஆஜாராக வந்த சுவாமிநாதனை ஒரு கும்பல் சுந்தரபாண்டியன் நகர்ப் பகுதியில் வெட்டிக் கொலைசெய்தது. இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த கள்ளப்பெரம்பூர் போலீஸார் ஆறு பேரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கொலை
கொலை
மாதிரிப் படம்

இது குறித்து அந்தப் பகுதியில் விசாரித்தோம். ``சுவாமிநாதனின் அண்ணன் விஜய்யைக் கொலைசெய்த கும்பலுடன் ஹரிஹரன் என்பவர் பழகிவந்திருக்கிறார். தன்னோட சொந்தக்காரனான ஹரிஹரன் அவனுங்ககூட நெருக்கமாக இருக்கானே... அப்ப அண்ணன் கொலைசெய்யப்பட்டதுக்கு இவனும் உடைந்தையாக இருந்திருப்பான் என சுவாமிநாதன் சந்தேகப்பட்டிருக்கிறார். உடனே ஹரிஹரனிடம், `அண்ணனைக் கொன்ற கும்பல்கூட என்ன பழக்கம் வேண்டியிருக்கு'னு கேட்டு சண்டை போட்டதுடன் `அவங்ககூட பேசுவதை நிறுத்திக்க' என்று சொல்லி எச்சரித்திருக்கிறார். விஜய்யைக் கொலைசெய்த கும்பல் மணல் திருட்டில் ஈடுபட்டுவருவதாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், மீண்டும் ஹரிஹரன், அபிசாய் என்பவருடன் ஒன்றாகச் சுற்றியிருக்கிறார். இதைப் பார்த்துக் கோபமடைந்த சுவாமிநாதன் போதையில் இருந்ததால், `நான் உங்களால உயிருக்கு பயந்து ஊர்ல இருக்க முடியாம கஷ்டப்படுறேன். ஆனா நீங்க என் அண்ணனைக் கொலைசெய்ததுடன் மணல் திருடி விற்பனை செஞ்சு ஜாலியா இருக்கீங்களா' என்று அபிசாயை அடித்திருக்கிறார்.

உடனே, `நீ ஒரு ஆம்பளையா இருந்தால் எங்க ஏரியாவுல வந்து என் மேல கைய வெச்சுப் பாரு' என்று அபிசாய் சொல்லிட்டு ஹரிஹரனை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். இதனையடுத்து முத்துக்குமார் என்பவர் வீட்டுக்குச் சென்று சுவாமிநாதன் சண்டை போட்டதைக் கூறியிருக்கின்றனர். முத்துக்குமார் வீட்டில் அவர் நண்பர்களான பங்கஜ்குமார், செபாஸ்டின், மாதவன் ஆகியோரும் இருந்திருக்கின்றனர்.

பின்னர், அரிவாளுடன் முத்துக்குமார் வீட்டுக்குச் சென்ற சுவாமிநாதன், `என் அண்ணனைக் கொலைசெய்த உங்களைச் சும்மா விட மாட்டேன்' என சத்தம் போட்டிருக்கிறார். உடனே முத்துக்குமார் தலைமையிலான அந்தக் கும்பல், `இவனை விட்டா நமக்கு ஆபத்து' எனக் கூறி வீட்டில் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலைசெய்திருக்கிறது.

கைது
கைது

கடந்த தீபாவளி சமயத்தில் சுவாமிநாதனின் அண்ணன் விஜய் கொலைசெய்யப்பட்டார். இந்த வருட தீபாவளி சமயத்தில் தம்பியும் கொலைசெய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக முத்துக்குமார் (30), பங்கஜ்குமார் (24), பிருந்தா வனத்தைச் சேர்ந்த அபிசாய் (25), பள்ளியக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த செபாஸ்டின் (20), பொத்தேரி பாளையத்தைச் சேர்ந்த ஹரிஹரன் (24), காமாட்சியம்மன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த மாதவன் (25) ஆகிய ஆறு பேரை போலீஸார் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்" என்றனர்.