Published:Updated:

சென்னை: ரௌடி குத்திக் கொலை... அப்பா, மகன் போலீஸில் சிக்கியதன் பின்னணி என்ன?!

கொலை

சென்னையில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த கொலைக்குப் பழிக்குப்பழியாக ரௌடி ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அப்பா, மகன் உட்பட 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சென்னை: ரௌடி குத்திக் கொலை... அப்பா, மகன் போலீஸில் சிக்கியதன் பின்னணி என்ன?!

சென்னையில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த கொலைக்குப் பழிக்குப்பழியாக ரௌடி ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அப்பா, மகன் உட்பட 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Published:Updated:
கொலை

சென்னை கோயம்பேடு, நெற்குன்றம் அகத்தியர் நகர், முதல் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (29). ரௌடியான இவர், நேற்றிரவு (9.8.2022) இரவு 10 மணியளவில் நெற்குன்றம் மந்தைவெளி தெருவில் தன்னுடைய பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த ஒரு கும்பல் ராஜ்குமாரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டது. பின்னர் அந்தக் கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜ்குமாரை சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றது. அதில் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலை
கொலை

இது குறித்து கோயம்பேடு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீஸார், ராஜ்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ராஜ்குமாரின் தம்பி ஜெயக்குமார் என்பவர் கொடுத்த புகாரில் கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டது. சி.சி.டி.வி கேமரா பதிவுகள், செல்போன் சிக்னல் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தினர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விசாரணையில் திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த லால் என்கிற பிரகாஷ் (29), அவரின் தந்தை குமார், திருவேற்காடு பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்த ராகுல் (19), காந்தி நகரைச் சேர்ந்த சுந்தர் (21), ஜெயம் நகரைச் சேர்ந்த நாகராஜ் (44) ஆகிய 5 பேருக்கு ராஜ்குமாரின் கொலை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைதுசெய்து மூன்று கத்திகளைப் பறிமுதல் செய்தனர். கைதுசெய்யப்பட்ட லால் என்கிற பிரகாஷ்மீது திருவேற்காடு காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. மேலும் அவர் அந்தக் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார்.

ராகுல்
ராகுல்

கைதானவர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கடந்த ஆண்டு திருவேற்காடு பகுதியில் சண்முகம் என்பவர் ஓட ஓட விரட்டி கொலைசெய்யப்பட்டார். அந்த வழக்கில் முதல் குற்றவாளியாக ராஜ்குமார் சேர்க்கப்பட்டார். அந்த வழக்கில் சிறைக்குச் சென்ற ராஜ்குமார், கடந்த மாதம் சிறையிலிருந்து வெளியில் வந்தார். இந்தத் தகவலைக் கேள்விபட்டதும் சண்முகத்தின் நண்பரான லால் என்கிற பிரகாஷ், தன்னுடைய தந்தை குமார், மற்றும் கூட்டாளிகளுடன் ராஜ்குமாரை கொலைசெய்ய திட்டமிட்டார். தற்போது ராஜ்குமார், திருவேற்காடு பகுதியில் வசிக்காமல் நெற்குன்றம் பகுதியில் குடியிருப்பது தெரியவந்தது. அதனால் அந்தப்பகுதியில் லால் என்கிற பிரகாஷ், அவரின் கூட்டாளிகள் ராஜ்குமாரின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்தச் சூழலில் நேற்றிரவு தனியாக சிக்கிய ராஜ்குமாரை சுற்றி வளைத்து கொலைசெய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். கொலை நடந்த சில மணி நேரத்திலேயே கொலையாளிகளைப் பிடித்துவிட்டோம். கொலைசெய்யப்பட்ட ராஜ்குமார்மீதும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறையிலிருந்து வெளியில் வந்த ராஜ்குமார், ரௌடியிஸத்தில் ஈடுபடாமல் ஒதுங்கி வாழ்ந்து வந்துள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது" என்றனர்.