Published:Updated:

திருவள்ளூர்: `தண்டவாளத்தில் ரவுடி தலை; தோப்பில் சடலம்' - மாணவன் கொலைக்குப் பழிக்குப் பழி?

தண்டவாளத்தில் ரவுடியின் தலை
தண்டவாளத்தில் ரவுடியின் தலை

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே மனிதத் தலை ஒன்று கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதைப்பார்த்தபோது அது ரவுடி மாதவனின் தலை என்பதை போலீஸார் உறுதிப்படுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே மனிதத் தலை ஒன்று கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் அந்தத் தலையை மீட்டனர். அதைப்பார்த்த போலீஸாருக்கு அது ரவுடி மாதவனின் தலை என்பது தெரிந்தது. அதனால், மாதவனின் சடலம் எங்கு என்று போலீஸார் தேடினர். அப்போது ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதுக்கும்மிடிப்பூண்டி தைலம் தோட்டத்தில் ரவுடி மாதவனின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

ரவுடி மாதவனின் சடலம்
ரவுடி மாதவனின் சடலம்

உடனடியாக அங்கு சென்ற போலீஸார், ரவுடி மாதவனின் சடலத்தை மீட்டனர். இதையடுத்து தலை, சடலம் ஆகியவற்றை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரவுடி மாதவனை யார் கொலை செய்தார்கள் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவரின் செல்போன் அழைப்புகள், செல்போன் சிக்னல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். போலீஸாரின் தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,``கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆத்தம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மாதவன். இவர், மீது கொலை வழக்கு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே 2 ரவுடிகள் மற்றும் கல்லூரி மாணவர் என 3 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி மாதவன், சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

கொலை
கொலை
Representational Image
சென்னை: `சாமி போட்டோக்களில் ரத்தம்!' - போலீஸ் இன்ஃபார்மரான வி.சி.க பிரமுகர் கொலை

இந்தச் சமயத்தில்தான் தோப்பில் ரவுடி மாதவன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் தலையைத் துண்டாக வெட்டி எடுத்த கொலையாளிகள், கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்டுக் கிடந்த தண்டவாளத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளனர். அதனால் 2019-ம் ஆண்டு நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக ரவுடி மாதவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்துவருகிறது. சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம்" என்றார்.

ரவுடி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு