Published:Updated:

`முன்விரோதம்... அடுத்தடுத்த வழக்குகள்!' -புதுக்கோட்டை ரவுடிக்கு நேர்ந்த கொடூரம்

கொலை செய்யப்பட்ட இடிமணி
கொலை செய்யப்பட்ட இடிமணி

இடிமணி மீது 4 வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், முன்விரோதம் காரணமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்.என் புரம் பகுதியைச் சேர்ந்தவர், சேகர். இவரது மகன் இடிமணி (32). பிரபல ரவுடியாக வலம் வந்த இடிமணி மீது அறந்தாங்கி காவல் நிலையத்தில் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இடிமணி, தனது நண்பரான கூத்தாடி வயலைச் சேர்ந்த சதீஷுடன் அறந்தாங்கி-கட்டுமாவடி சாலை அருகில் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

`ஒரு ரிமாண்ட்டைக்கூட ஒழுங்கா செய்ய முடியல..!' -கால்முறிவிலும் காவலர்களை வசைபாடிய `கஞ்சா' மணி

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர், இடிமணியை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளனர். தடுக்க வந்த சதீஷுக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த இடிமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சதீஷுக்கு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

கொலை செய்யப்பட்ட இடிமணி
கொலை செய்யப்பட்ட இடிமணி
230750825053102

இறந்துபோன இடிமணி மீது அறந்தாங்கி காவல் நிலையத்தில் 4 வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், வழக்கு ஒன்றில் ஆஜர் ஆக அழைத்தும் காவல் நிலையம் வராமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், தற்போது அறந்தாங்கியில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

`சேர்ந்து வாழப்போறோம்னு தைரியமா சொல்லு' என்றார்! - கொலைக்கான பின்னணியை வெளியிட்ட மீஞ்சூர் பெண்

இடிமணியைக் கொலை செய்தது எல்.என். புரத்தைச் சேர்ந்த அவரது நண்பர்கள் என்றும் கூறப்படுகிறது. முன்விரோதம் காரணமாகவே இவர்கள் இடிமணியை வெட்டிக் கொலை செய்துள்ளனர் என்பது போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, இதுகுறித்து அறந்தாங்கி போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு