Published:Updated:

சென்னை: அடிக்கடி தகராறு; கொலை முயற்சி... பிரபல ரௌடி கொலை செய்யப்பட்டதன் பின்னணி

கொலை வழக்கில் கைதானவர்கள்

சென்னையில் பிரபல ரௌடி பழனி கொலைசெய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சென்னை: அடிக்கடி தகராறு; கொலை முயற்சி... பிரபல ரௌடி கொலை செய்யப்பட்டதன் பின்னணி

சென்னையில் பிரபல ரௌடி பழனி கொலைசெய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Published:Updated:
கொலை வழக்கில் கைதானவர்கள்

சென்னை கொளத்தூர், பாரத் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் பழனி (28). இவர் ராஜமங்கலம் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி. இவர்மீது ராஜமங்கலம் காவல் நிலையத்தில் இரண்டு கொலை முயற்சி வழக்குகள் உட்பட 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 14.3.2022-ம் தேதி மாலை 6:30 மணியளவில் கொளத்தூர், மக்காரம் தோட்டம், எத்திராஜ் தெருவில் உள்ள நண்பனைப் பார்க்க பழனி சென்றார். அப்போது பைக்கில் அவ்வழியாக வந்த இரண்டு நபர்கள் பழனியைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

கொலை
கொலை

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராஜமங்கலம் போலீஸார், பழனியின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவுசெய்த போலீஸார் கொலையாளிகளைத் தேடிவந்தனர். அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகள், செல்போன் சிக்னல் ஆகியவற்றை போலீஸார் ஆய்வுசெய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன் அடிப்படையில் போலீஸார் கொளத்தூரைச் சேர்ந்த விக்கி என்கிற அமாவாசை (28) என்பவரையும், அவரின் கூட்டாளியான ஆதிகேசவனையும் (19) கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு கத்திகள், பைக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரித்தபோது பிரபல ரௌடி பழனியைக் கொலை செய்ததற்கான காரணத்தைத் தெரிவித்தனர். விசாரணைக்குப் பிறகு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இந்தக் கொலை வழக்கு தொடர்பாக போலீஸார் விசாரித்துவருகின்றனர். விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது.

ஆதிகேவசன்
ஆதிகேவசன்

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கொலைசெய்யப்பட்ட பழனி, பிரபல ரௌடி. அதனால் பழனிக்கும் விக்கி, ஆதிகேவசன் ஆகியோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு விக்கியைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய பழனி முயன்றுள்ளார். அதேபோல 2020-ம் ஆண்டு ஆதிகேவசனையும் கத்தியால் குத்தி பழனி கொலை செய்ய முயன்றிருக்கிறார். அதனால் விக்கியும் ஆதிகேவசனும் சேர்ந்து பழனியைக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதற்காக சம்பவத்தன்று தனியாக நண்பனைப் பார்க்க பழனி சென்றபோது பின்தொடர்ந்து வந்த விக்கியும் ஆதிகேசவனும் கொலை செய்ததாக விசாரணையின்போது இருவரும் தெரிவித்தனர். மேலும் கொலைசெய்யப்பட்ட பழனி, பிரபல ரௌடி ஒருவரின் கூட்டாளியாக இருந்துள்ளார். அவரைப் பிரிந்து சென்று தனியாக தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கத் திட்டமிட்ட சமயத்தில்தான் பழனி கொலைசெய்யப்பட்டிருக்கிறார். அதனால் அது தொடர்பாகவும் விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism