Published:Updated:

சென்னை: மனைவி கண்முன் `ஒரு கை' ரௌடி கொலை! - யார் இந்த ஓலை சரவணன்?

ரௌடி ஓலை சரவணன்

சென்னை, திருவான்மியூரில் மனைவி கண்முன்னாலேயே ரௌடி ஓலை சரவணன் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: மனைவி கண்முன் `ஒரு கை' ரௌடி கொலை! - யார் இந்த ஓலை சரவணன்?

சென்னை, திருவான்மியூரில் மனைவி கண்முன்னாலேயே ரௌடி ஓலை சரவணன் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
ரௌடி ஓலை சரவணன்

சென்னை, திருவான்மியூர் மாநகராட்சி பள்ளி அருகே ரௌடி ஒலை சரவணனும் அவரின் மனைவி ரெபேக்காவும் பைக்கில் நேற்று (5.9.2022- சென்றனர். அப்போது பாரதிதாசன் சாலை அருகே சரவணனின் பைக்கைப் பின் தொடர்ந்து வந்த ஒரு கும்பல், திடீரென சரவணனை அரிவாளால் வெட்டியது. இதில் சரவணன் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அடுத்த சில நிமிடங்களில் சரவணனை சுற்றி வளைத்து வெட்டிவிட்டு அந்தக் கும்பல் பைக்கில் தப்பிச் சென்றது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் சரவணனின் மனைவி ரெபேக்கா அதிர்ச்சியில் உறைந்தார்.

கொலை
கொலை

இந்தச் சம்பவம் குறித்து திருவான்மியூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் ஓலை சரவணனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணனின் மனைவி ரெபேக்காவிடம் கொலை சம்பவம் குறித்து விசாரித்தனர். அப்போது இரண்டு பேர் பைக்கில் வந்த விவரத்தை அவர் தெரிவித்தார். அதன்அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

யார் இந்த ஓலை சரவணன் என திருவான்மியூர் போலீஸாரிடம் விசாரித்தோம். ``சென்னை திருவான்மியூர், மல்லிகைப்பூ நகரைச் சேர்ந்தவர் ஓலை சரவணன். இவர்மீது ஒரு கொலை வழக்கு உள்பட சில வழக்குகள் உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு சென்னை திருவான்மியூர் திருவீதியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பெயின்டர் சுரேஷ் என்பவரைக் கொலைசெய்த வழக்கில் ஓலை சரவணன் கைதுசெய்யப்பட்டார். பின்னர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் அவர் சிறையிலிருந்து வெளியில் வந்தார். சுரேஷின் கொலைக்குப் பழிக்குப் பழிவாங்க ஒரு டீம் காத்திருந்தது. இது குறித்து தகவல் தெரிந்த ஓலை சரவணனும் முன்எச்சரிக்கையுடனே இருந்து வந்தார். இந்தச் சூழலில்தான் மனைவியுடன் காய்கறி மார்க்கெட்டிற்கு ஓலை சரவணன் பைக்கில் செல்லும் தகவலறிந்த கும்பல், திட்டம் போட்டு அவரைக் கொலைசெய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

சரண் அடைந்தவர்கள்
சரண் அடைந்தவர்கள்

ஓலை சரவணனை பழிவாங்க காத்திருந்த சுரேஷின் உறவினர்கள் விஜயமூர்த்தி என்பவரைக் கொலைசெய்த வழக்கில் கைதாகி சிறையில்உள்ளனர். ஓலை சரவணனைக் கொலைசெய்ததாக திருவான்மியூரைச் சேர்ந்த ராஜதுரை, கோல்டு ராஜ்குமார் என இரண்டு பேர் 6.9.2022-ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம்" என்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``சுரேஷ் கொலைசெய்யப்பட்ட பிறகு ஓலை சரவணனைக் கொலைசெய்ய திட்டமிட்ட அவரின் எதிர்தரப்பு பல தடவை ஸ்கெட்ச் போட்டுள்ளது. ஆனால் அதிலிருந்து ஓலை சரவணன் தப்பி வந்தார். ஒரு தடவை ஓலை சரவணனைக் சுற்றி வளைத்து அவரின் எதிர்டீம் வெட்டியுள்ளது. அப்போது ஓலை சரவணனின் வலது கையில் வெட்டு விழுந்து அது துண்டாகியுள்ளது. ஆனால் அவர் உயிரோடு தப்பிவிட்டார். அதன்பிறகு ஒரு கையோடு வாழ்ந்து வந்த ஓலை சரவணனை இந்தத் தடவை அவரின் எதிர் டீம் கொலை செய்துள்ளது. சுரேஷ், ஓலை சரவணன் என தொடர்ந்து மல்லிகைப்பூ நகரில் பழிக்குப்பழியாக கொலை சம்பவங்கள் நடந்து வருவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கோயில் திருவிழாவின்போது பணம் வசூலிப்பதில் இரண்டு தரப்புக்கு ஏற்பட்ட தகராறே காரணம்" என்றார்.