போலீஸ்-கேங்ஸ்டர் மோதலால் கலவர பூமியாகியிருக்கிறது, உத்தரப்பிரதேசம்! கான்பூரில் எட்டு போலீஸாரைச் சுட்டுக் கொன்ற விகாஸ் துபே என்ற ரௌடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். விகாஸின் கூட்டாளிகள் சிலரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளனர். சினிமாவை மிஞ்சும் காட்சிகள் அரங்கேறியிருக் கின்றன உத்தரப்பிரதேசத்தில். யார் இந்த விகாஸ் துபே?

உ.பி மாநிலம், கான்பூர் மாவட்டத்திலுள்ள பிக்ரூ என்ற கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்தான் விகாஸ் துபே. உத்தரப்பிரதேசத்துக்கு ஆன்மிக அடையாளம் இருக்கும் அதே அளவுக்கு தாதாயிச அடையாளமும் உண்டு. ஆரம்பத்தில் விகாஸ் துபேயும் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என்று வலம்வந்தவர்தான். காவல்துறையினரும் அரசியல்வாதிகளும் அவரது குற்றங்களுக்கு துணைபோனார்கள். பா.ஜ.க., சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் என உ.பி-யின் அனைத்து முக்கியக் கட்சிகளிலும் விகாஸ் இருந்துள்ளார். இதன் மூலம் பஞ்சாயத்துத் தலைவர், மாவட்ட பஞ்சாயத்துக்குழு உறுப்பினர் ஆகிய பதவிகள் விகாஸைத் தேடி வந்துள்ளன. விகாஸின் மனைவி மற்றும் சகோதரர்களும் அரசியலில் குதித்து, பதவிகளை அடைந்தனர்.

சாதாரண ரௌடியாக இருந்த விகாஸ் துபே, கேங்ஸ்டரானார். கான்பூரில் கிட்டத்தட்ட 80 கிராமங்களைத் தன் கன்ட்ரோலுக்குக் கொண்டு வந்தார். எப்போதும் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களையே தன் டீமில் சேர்த்துக்கொள்வார்.

‘‘இப்போதைய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2001-ம் ஆண்டு உத்தரப்பிரதேச முதல்வராக இருந்தார். அப்போது, மாநில இணை அமைச்சராக இருந்த சந்தோஷ் சுக்லாவை, ஷிவ்லி என்ற காவல்நிலையத்தில் வைத்தே சுட்டுக் கொன்றார் விகாஸ். 30-க்கும் மேற்பட்ட போலீஸார் அதை நேரில் பார்த் துள்ளனர். அப்படியிருந்தும் ஒருவர்கூட சாட்சி சொல்லவில்லை. அதனால், விகாஸ்மீது எந்த நடவடிக்கையும் இல்லை’’ என்று அதிர்ச்சி விலகாமல் சொல்கின்றனர் பாதிக்கப்பட்ட தரப்பினர்.

நில அபகரிப்பு, ஹவாலா ஆகியவை மூலம் விகாஸ் துபேவுக்குச் சொத்துகள் குவிந்துள்ளன. கான்பூரில் மட்டுமே 12 சொகுசு பங்களாக்கள், 16 ஃப்ளாட்கள் இருக்கின்றன. தாய்லாந்து, துபாய் உள்ளிட்ட நாடுகளிலும் முதலீடு செய்துள்ளார். அந்த வகையில், விகாஸ் துபேவுக்கு சுமார் 60,000 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. விகாஸுக்கு இரண்டு மகன்கள். அவர்களில் ஒருவர் ரஷ்யாவில் மருத்துவம் படித்துவருகிறார்.

‘‘30 ஆண்டுகளில் ஐந்து கொலைகள் உட்பட 62 வழக்குகள் விகாஸ் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அவையெல்லாம் வெறும் கண்துடைப்பு மட்டுமே. பள்ளி ஆசிரியர் தொடங்கி அரசியல்வாதி வரை விகாஸ் கொலை செய்திருந்தாலும், காவல்துறைக்கும் அவருக்கும் நல்ல உறவு இருந்துவந்தது’’ என்கின்றனர் விவரமறிந்த வட்டாரத்தினர்.

‘‘ராகுல் திவாரி என்ற உள்ளூர்வாசி ஒருவரை மிரட்டி நிலம் அபகரிக்க முயன்றிருக்கிறார் விகாஸ். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. அப்போதும் அடங்காத விகாஸ், ராகுலை கடத்திச் சென்று அடித்துள்ளார். இதனால், விகாஸ் துபே மீது ராகுல் திவாரி சௌபேபூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். உள்ளூர் போலீஸ் விகாஸுக்கு ஆதரவாக இருந்தது.

ஆள்கடத்தல் பிரிவில் வழக்கு பதிவு செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதால், ஆள்கடத்தல் பிரிவை நீக்கிவிட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா, அப்போதைய கான்பூர்

எஸ்.எஸ்.பி அனந்த தேவுக்கு கடிதம் எழுதியும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில மாதங்களில் அவர் டி.ஐ.ஜி-யாகப் பதவி உயர்வு பெற்றுச் சென்றுவிட்டார். விகாஸின் அத்துமீறல்கள் தொடரவே, இனியும் விட்டு வைத்தால் சரிவராது என டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா தலைமையிலான டீம், விகாஸை கைதுசெய்யத் திட்டமிட்டனர்’’ என்கின்றனர் நேர்மையான காவல்துறை அதிகாரிகள் சிலர்.

மிகவும் ரகசியமாக இந்த ஆபரேஷனை முடிப்பதற்காக, ஒரு நள்ளிரவைத் தேர்ந்தெடுத்தது போலீஸ். விகாஸ் வீட்டினருகே போலீஸார் சென்ற சில விநாடிகளில், நாலாபுறங்களிலிருந்தும் அவர்களை நோக்கி துப்பாக்கிக் குண்டுகள் பொழிந்துள்ளன. தேவேந்திர மிஸ்ரா உள்ளிட்ட எட்டு போலீஸார் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். ‘‘விகாஸுக்கு விசுவாசம் காட்டுவதற்காக, போலீஸார் வரும் தகவலை உள்ளூர் காவல்நிலைய ஆய்வாளர் வினய் திவாரி, உதவி ஆய்வாளர் கே.கே.ஷர்மா ஆகியோர் முன்கூட்டியே தகவலைச் சொல்லிவிட்டதுதான் அதற்குக் காரணம்’’ என்று போலீஸாரே குற்றம்சாட்டுகின்றனர்.

அதுவரை விகாஸுக்கு ஆதரவளித்து வந்த காவல்துறை முதன்முறையாகக் கொந்தளித்தது. விகாஸின் வீடு இடிக்கப்பட்டது. அமர் துபே, பிரசாந்த் மிஸ்ரா, கார்த்திகேய மிஸ்ரா, ரன்பீர் சுக்லா ஆகிய விகாஸின் கூட்டாளிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், உ.பி போலீஸாரால் விகாஸ் துபேவை நெருங்க முடியவில்லை. உ.பி காவல்துறையின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, மத்தியப்பிரதேசம் சென்றுவிட்டார் விகாஸ்.

மத்தியப்பிரதேசத்தில் அவரைக் காப்பாற்ற அரசியல் புள்ளிகள் சிலர் முயன்றுள்ளனர். விஷயம் சென்சிடிவ் என்பதால், அது நடக்கவில்லை. உஜ்ஜயினி மகாகாளி கோயில் அருகே விகாஸே, ‘‘நான்தான் விகாஸ் துபே. கான்பூர் வாலா...” என்று கத்திக்கொண்டே சரணடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, கான்பூர் போலீஸார் ம.பி விரைந்தனர். அங்கு வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட விகாஸ், உ.பி போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டார்.

முதலில் அவரை விமானத்தில்தான் அழைத்து வருவதாக இருந்தது. பிறகு, தரைவழியிலேயே செல்லலாம் என முடிவெடுத்து, டாடா சஃபாரி காரில் கிளம்பியுள்ளனர். ஜான்சி அருகே சஃபாரியிலிருந்து டியூவி ரக காருக்கு விகாஸை மாற்றியுள்ளனர். கைவிலங்கு போடப்படவில்லை. இந்த நிலையில், அவர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானபோது, போலீஸாரைத் தாக்கிவிட்டு விகாஸ் தப்ப முயன்றதால், அவரை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றதாக போலீஸார் சொல்கின்றனர்.

‘‘தானாகச் சரணடைந்த விகாஸ், எப்படி தப்பிக்க முயன்றிருப்பார்? விமானத்தில் வந்தால் என்கவுன்ட்டர் செய்ய முடியாது என்பதால்தான் காரில் வந்துள்ளனர். எல்லை பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதற்காக, தெளிவாகத் திட்டமிட்டு கான்பூரில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார், எனவே, இது திட்டமிடப்பட்ட என்கவுன்ட்டர்தான்’’ என்றும் சிலர் சொல்கின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்தவரும், கான்பூர் மாவட்ட எஸ்.எஸ்.பி-யுமான தினேஷ்குமார், ‘‘விகாஸுக்கு உதவிய போலீஸார்மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலுள்ள அனைத்துக் காவலர்களும் மாற்றப்பட்டுள்ளனர். போலீஸாரைத் தாக்கிவிட்டு தப்ப முயன்றதால்தான் விகாஸ் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இந்த வழக்கில் எனக்கு எந்த அரசியல் அழுத்தமும் வரவில்லை. உத்தரப்பிரதேசம் நம் தமிழகம் மாதிரி இல்லை. இங்கு பிஸ்டல்களெல்லாம் சர்வ சாதாரணம். எங்களின் உயிர்களுக்கே பாதுகாப்பு இல்லை. ஆனால், இன்னொரு விகாஸ் துபே உருவாகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். விகாஸின் ஒட்டுமொத்த நெட்வொர்க்கையும் பிடிக்கும்வரை இந்த ஆபரேஷன் ஓயாது’’ என்றார்.

`ஆயுதம் எடுத்தவனுக்கு ஆயுதத்தால்தான் சாவு’ என்ற பழமொழி விகாஸ் துபே விவகாரத்தில் மீண்டும் நிஜமாகியுள்ளது.