Published:Updated:

சென்னை: `நான்தான் பெரிய ரௌடி' - கெத்து காட்டியவரை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய பிரபல ரௌடியின் மகன்

கொலை | கைது

சரித்திரப் பதிவேட்டிலிருக்கும் ரௌடியை அடித்ததோடு, `இனி நான்தான் ஏரியாவில் பெரிய ரௌடி’ என பந்தா காட்டிய இளைஞரை மது விருந்துக்கு அழைத்து நண்பர்கள் கொலைசெய்திருக்கின்றனர்.

சென்னை: `நான்தான் பெரிய ரௌடி' - கெத்து காட்டியவரை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய பிரபல ரௌடியின் மகன்

சரித்திரப் பதிவேட்டிலிருக்கும் ரௌடியை அடித்ததோடு, `இனி நான்தான் ஏரியாவில் பெரிய ரௌடி’ என பந்தா காட்டிய இளைஞரை மது விருந்துக்கு அழைத்து நண்பர்கள் கொலைசெய்திருக்கின்றனர்.

Published:Updated:
கொலை | கைது

சென்னை வியாசர்பாடி, சர்மாநகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (31). இவர் பர்மா பஜாரிலுள்ள செல்போன் கடையில் வேலை பார்த்துவந்தார். தன்னுடைய நண்பர்களுடன் பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவிலுள்ள சுடுகாட்டில் கடந்த 14-ம் தேதி கார்த்திக் மது அருந்தியிருக்கிறார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கார்த்திக்கை அவரின் நண்பர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் கார்த்திக்கின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பீஸ்கா கார்த்திக்
பீஸ்கா கார்த்திக்

இந்தக் கொலை வழக்கில் வியாசர்பாடியைச் சேர்ந்த பீஸ்கா கார்த்திக் (31), செந்தில்குமார் (42), மோகன் என்கிற காட்டன் மோகன் (44) ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து கத்தி ஒன்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்தக் கொலை வழக்கில் இன்னும் சிலரை போலீஸார் தேடிவருகின்றனர்.

சென்னை: `நான்தான் பெரிய ரௌடி' - கெத்து காட்டியவரை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய பிரபல ரௌடியின் மகன்

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கொலைசெய்யப்பட்ட கார்த்திக், பர்மா பஜாரில் வேலை பார்த்ததால் அவரை `பஜார் கார்த்திக்’ என்றே அவரின் நண்பர்கள் அழைப்பதுண்டு. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு எம்.கே.பி.நகர் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான பிரபல ரௌடி மோகன் என்கிற காட்டன் மோகன் என்பவருடன் சேர்ந்து பஜார் கார்த்திக் மது அருந்தியிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் ரௌடி காட்டன் மோகனை கார்த்திக் அடித்திருகிறார். இந்தத் தகவலை தன்னுடைய நண்பர்களிடம் சொன்ன கார்த்திக், `இனி நான்தான் பெரிய ரௌடி’ என கெத்து காட்டி வந்திருக்கிறார். இந்தத் தகவலைக் கேள்விபட்ட காட்டன் மோகன், தன்னுடைய மகன் மாதவனிடம் கூறி வருத்தப்பட்டிருக்கிறார். அதனால் மாதவன், அப்பாவை அவமானப்படுத்திய பஜார் கார்த்திக்கை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார். அதற்காக சுடுகாட்டில் மது விருந்துக்கு ஏற்பாடு செய்து கார்த்திக்கை அவரின் நண்பர்கள் மூலம் அங்கு வரவழைத்திருக்கிறார்.

செந்தில்குமார்
செந்தில்குமார்

மது விருந்துக்கு வந்த கார்த்திக்கை, மாதவன் உட்பட அவரின் நண்பர்கள் சேர்ந்து கொலை செய்துவிட்டு தப்பியிருக்கிறார்கள். சிசிடிவி செல்போன் சிக்னல் அடிப்படையில் மூன்று பேரைக் கைதுசெய்திருக்கிறோம். இந்த வழக்கில் இன்னும் சிலரைத் தேடிவருகிறோம்" என்றனர்.