Published:Updated:

`அபுதாபி அரச குடும்ப ஊழியர்’... டெல்லி ஹோட்டலில் ராஜ வாழ்க்கை - ரூ.23 லட்சம் பில் பாக்கியுடன் மாயம்!

ஹோட்டல் லீலா பேலஸ்

அபுதாபியில் அரச குடும்ப ஊழியர் என்றுகூறி டெல்லி நட்சத்திர ஹோட்டலில் நான்கு மாதம் தங்கி ராஜ வாழ்க்கை வாழ்ந்துவிட்டு ரூ.23 லட்சம் பில் பாக்கி வைத்துவிட்டு சென்றவரை போலீஸார் தேடிவருகின்றனர்.

டெல்லியிலுள்ள லீலா பேலஸ் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி மொகமத் ஷெரீப் என்பவர் அறை எடுத்து தங்குவதற்கு வந்தார். அவர் தன்னை அபுதாபி மன்னர் குடும்பத்துப் பணியாளர் என்று கூறிக்கொண்டார். ஹோட்டல் ஊழியர்களிடம் தான் அபுதாபி மன்னருக்கு தனிப்பட்ட முறையில் பணியாற்றுவதாகக் கூறினார். அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருப்பதாகக்கூறி அபுதாபி குடியிருப்புச் சான்று உட்பட சில ஆவணங்களையும் தாக்கல்செய்தார். தான் சொல்லும் கதையை அனைவரும் நம்ப வேண்டும் என்பதற்காக அடிக்கடி தான் அபுதாபியில் எப்படியெல்லாம் வாழ்ந்துவருகிறேன் என்பது குறித்து அடிக்கடி ஹோட்டல் ஊழியர்களிடம் கதை விட்டுக்கொண்டே இருப்பாராம்.

`அபுதாபி அரச குடும்ப ஊழியர்’... டெல்லி ஹோட்டலில் ராஜ வாழ்க்கை - ரூ.23 லட்சம் பில் பாக்கியுடன் மாயம்!
Representation image

மொத்தம் நான்கு மாதம் தங்கியிருந்தார். ஆரம்பத்தில் சிறிது பணம் கொடுத்தார். அதன் பிறகு அபுதாபியிலிருந்து பணம் வந்ததும் கொடுப்பதாகத் தெரிவித்தார். அவர் தங்கியது மற்றும் சாப்பாட்டுச் செலவு என மொத்தம் 35 லட்சம் நான்கு மாதத்துக்கு கட்டணமாகும். இதில் 11.5 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு அந்த நபர் திடீரென தப்பிச்சென்றுவிட்டார். 23 லட்சம் பாக்கி வைத்திருக்கிறார். இது குறித்து ஹோட்டல் நிர்வாகம் போலீஸில் புகார் செய்திருக்கிறது. போலீஸார் மொகமத் ஷெரீப் கொடுத்த ஆவணங்களைச் சோதித்துவருகின்றனர்.

அவை போலியாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. தப்பிச்செல்லும்போது 20 லட்சத்துக்கு ஒரு செக் கொடுத்திருக்கிறார். அதுவும் பணம் இல்லாமல் திரும்ப வந்துவிட்டது. அதோடு ஹோட்டல் அறையிலிருந்த வெள்ளிப்பாத்திரங்கள் உட்பட அனைத்தையும் திருடிச் சென்றிருக்கிறார். அவரின் புகைப்படத்தைக் கண்காணிப்பு கேமரா மூலம் எடுத்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.