Published:Updated:

புதுக்கோட்டை: நகைக்கடன் முறைகேடு! - சஸ்பெண்ட் செய்யப்பட்ட கூட்டுறவு வங்கிச் செயலாளர் தற்கொலை

 நீலகண்டன்
News
நீலகண்டன்

சென்னையிலுள்ள கூட்டுறவுத்துறை பதிவாளர் அலுவலகத்தில் வைத்து, சம்பந்தப்பட்டவர்களிடம் டிசம்பர் 16-ம் தேதி விசாரணை நடத்தப்படவிருந்தது. இந்த நிலையில், வங்கிச் செயலாளர் நீலகண்டன் திடீரென தற்கொலை செய்துகொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் தொடக்க வேளாண்மை நிலவள வங்கியில் நகைக் கடன் வழங்கியதில் ரூ.1.08 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றது கண்டறியப்பட்டது. இதில், வங்கிச் செயலாளர் நீலகண்டன், மேற்பார்வையாளர் சக்திவேல் ஆகியோர் ரூ.1.08 கோடி பணத்தை நகை இல்லாமலேயே தங்கள் உறவினர்களுக்கு வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டிருந்தனர் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, வங்கிச் செயலாளர் நீலகண்டன், மேற்பார்வையாளர் சக்திவேல் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மண்டல இணைப்பதிவாளர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டார். வங்கி நகை மதிப்பீட்டாளர் கனகவேல் வங்கியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இவர்களிடமிருந்து ரூ.90 லட்சம் வரையிலும் பணம் மீட்கப்பட்டிருப்பதாக் கூறப்படுகிறது.

கீரனூர் தொடக்க வேளாண்மை நிலவள வங்கி
கீரனூர் தொடக்க வேளாண்மை நிலவள வங்கி

இது தொடர்பாக, சென்னையிலுள்ள கூட்டுறவுத்துறைப் பதிவாளர் அலுவலகத்தில்வைத்து, சம்பந்தப்பட்டவர்களிடம் டிசம்பர் 16-ம் தேதி விசாரணை நடத்தப்படவிருந்தது. இந்த நிலையில், வங்கிச் செயலாளர் நீலகண்டன் திடீரென தனது வீட்டின் கழிவறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். நீலகண்டனின் உடலைக் கைப்பற்றி போலீஸார், பிரேத பரிசோதனைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

சென்னையில் வைத்து விசாரணை நடைபெறவிருந்த நிலையில் வங்கிச் செயலாளர் நீலகண்டன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz