Published:Updated:

ஈரானிலிருந்து வந்த கப்பல்; ரூ.125 கோடி மதிப்புடைய போதைப்பொருள் கடத்திய தொழிலதிபர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
போதைப்பொருள் கடத்தியவர் கைது!
போதைப்பொருள் கடத்தியவர் கைது!

ஈரானிலிருந்து கப்பலில் கொண்டு வரப்பட்ட நிலக்கடலை எண்ணெயுடன் சேர்த்து ரூ.125 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்தி வந்த மும்பை தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மும்பை அருகில் உள்ள நவிமும்பை நவசேவா துறைமுகத்தில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஈரானில் இருந்து வந்து இறங்கிய கண்டெய்னர்களை சோதனை அதிகாரிகள் சோதனை செய்தபோது ஒரு கண்டெய்னரில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த கண்டெய்னரில் நிலக்கடலை எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. அதனை சோதனை செய்த போது நிலக்கடலை எண்ணெயுடன் ஹெராயின் போதைப்பொருளும் இருந்தது. மொத்தம் 25 கிலோ ஹெராயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.125 கோடியாகும். அவற்றை வைபவ் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் நிறுவனம் ஈரானில் இருந்து இறக்குமதி செய்திருந்தது. இதையடுத்து மும்பை மஜித்பந்தரில் உள்ள அதன் அலுவலகத்திற்கு சென்று அதன் உரிமையாளர் சந்தீப் தாக்குர் என்பவரிடம் விசாரணை நடத்திய போது அவற்றை தான் இறக்குமதி செய்யவில்லை என்றும், தன்னுடன் கடந்த 15 ஆண்டுகளாக தொழில் செய்து வரும் ஜெயேஷ் சங்க்வி இறக்குமதி செய்ததாகவும் குறிப்பிட்டார். அதோடு சங்க்வி தனக்கு ஒரு கண்டெய்னருக்கு ரூ.10 ஆயிரம் கொடுப்பதாகத் தெரிவித்ததால் அவரை எனது கம்பெனி பெயரில் இறக்குமதி செய்ய அனுமதித்தேன்" என்றும் தெரிவித்தார். இதையடுத்து வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சங்க்வியை கைது செய்தனர். அவரைக் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

சென்னைக்கு ஆந்திராதான் கஞ்சா குடோன்; `சப்ளை பாய்ஸ்’  டெலிவரி - `போதை ஹப்’ ஆகிறதா தலைநகரம்?
Narcotic Drugs
Narcotic Drugs
Photo by Colin Davis on Unsplash

இதற்கு முன்பும் இதே போன்று சங்க்வி போதைப்பொருட்களை அதிக அளவில் கடத்தி வந்திருக்கவேண்டும் என்று கருதும் அதிகாரிகள் இந்தக் கடத்தலில் யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் இதே துறைமுகத்தில் 293 கிலோ ஹெராயின் போதைப்பொருள் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு சமீபத்தில் குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் 20 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு