Published:Updated:

ரூ.200 கோடி பணம் பறிப்பு வழக்கு: திகார் சிறையில் சுகேஷ் சந்திரசேகரைச் சந்தித்த 12 நடிகைகள்!

நடிகை நூரா, ஜாக்குலினுடன் சுகேஷ்
News
நடிகை நூரா, ஜாக்குலினுடன் சுகேஷ்

ரூ.200 கோடி மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரை திகார் சிறையில் 12 நடிகைகள் சந்தித்துப் பேசியுள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சிவிந்தர் மோகன் சிங் என்பவரை சிறையிலிருந்து விடுவிக்க அவரின் மனைவியிடம் ரூ.200 கோடி மிரட்டிப் பறித்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் மீது அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், நடிகை நூராபத்தேகி ஆகியோருக்கு விலை மதிப்புமிக்க பொருள்களைக் கொடுத்து தன் வலையில் விழவைத்திருக்கிறார் சுகேஷ்.

நடிகை நூரா மற்றும் ஜாக்குலினுடன் சுகேஷ்
நடிகை நூரா மற்றும் ஜாக்குலினுடன் சுகேஷ்

இது தொடர்பாக இரண்டு நடிகைகளிடமும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் சுகேஷிடம் பரிசுப்பொருள்களைப் பெற்றதை ஒப்புக்கொண்ட ஜாக்குலின், தனக்கு மட்டுமல்லாமல் வேறு நடிகைகள், மாடல் அழகிகளுக்கும் பரிசுப்பொருள்களை சுகேஷ் அனுப்பியதாகத் தெரிவித்துள்ளார். மேலும், சிறையில் ஆடம்பர வாழ்க்கை வாழ ஒவ்வொரு மாதமும் ஒரு கோடிக்கும் அதிகமாக சுகேஷ் செலவு செய்ததாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரை நடிகை ஜாக்குலின், நூரா உட்பட மொத்தம் 12 பாலிவுட் நடிகைகள் சந்தித்துப் பேசியிருப்பதாகவும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே திகார் சிறையில் தன்னை இரண்டு லாக்கர் வசதியுடன்கூடிய அறையில் அதிகாரிகள் அடைத்து வைத்திருப்பதாகவும், தன்னை சக கைதிகளுடன் பேச அனுமதிப்பதில்லை என்றும் கூறி நீதிமன்றத்தில் சுகேஷ் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதோடு தனது மனைவி லீனாவைச் சந்தித்துப் பேச சிறை அதிகாரிகள் அனுமதி கொடுப்பதில்லை என்றும், வாரம் ஒரு முறை உறவினர்கள் சிறைக் கைதிகளைச் சந்திக்க சிறைச் சட்டம் அனுமதிக்கிறது. அந்தச் சட்டத்தின் கீழ் தனது மனைவியை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். ``மனரீதியாக சிறையில் சித்ரவதை செய்யப்படுகிறேன். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவிருக்கிறேன்” என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.