Published:Updated:

ரூ.200 கோடி பறித்த வழக்கு: ஜாக்குலின் புகாரை தொடர்ந்து நடிகை நோரா ஃபதேஹியிடம் விசாரணை!

நோரா ஃபதேஹி

மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் நடிகை நோரா ஃபதேஹியிடம் டெல்லி போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

ரூ.200 கோடி பறித்த வழக்கு: ஜாக்குலின் புகாரை தொடர்ந்து நடிகை நோரா ஃபதேஹியிடம் விசாரணை!

மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் நடிகை நோரா ஃபதேஹியிடம் டெல்லி போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

Published:Updated:
நோரா ஃபதேஹி

டெல்லி தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.200 கோடி பறித்தது தொடர்பான வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரையும், அவரின் மனைவி லீனாவையும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். சுகேஷ் சந்திரசேகரிடம் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ரூ.7 கோடிக்கும் அதிகமாகப் பரிசுப்பொருள்களை வாங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதனால் இரண்டாவது துணை குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெர்னாண்டஸை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் குற்றவாளியாகச் சேர்த்துள்ளனர்.

சுகேஷ் சந்திரசேகரிடம் நடிகை நோரா ஃபதேஹி உட்பட வேறு சில பிரபலங்களும் பரிசுப்பொருள்களைப் பெற்றுள்ளனர். இதை சுட்டிக்காட்டி ஜாக்குலின் பெர்னாண்டஸ் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், சுகேஷிடம் பரிசுப்பொருள்களைப் பெற்ற மற்றவர்களைச் சாட்சியாகச் சேர்த்துவிட்டு என்னை மட்டும் குற்றவாளியாகச் சேர்த்திருப்பதாகவும், பாரபட்சமாக விசாரிப்பதாகவும் தெரிவித்திருந்தார். அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நோரா, சுகேஷ் ஆகியோரை ஒன்றாகவைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

ரூ.200 கோடி பறித்த வழக்கு: ஜாக்குலின் புகாரை தொடர்ந்து நடிகை நோரா ஃபதேஹியிடம் விசாரணை!

2020-ம் ஆண்டு டிசம்பருக்கு முன்பு சுகேஷ் சந்திரசேகரிடம் பேசியதில்லை என்று விசாரணையின்போது நோரா தெரிவித்திருந்தார். நோராவுக்கு சுகேஷ் பிஎம்டபியூள்யூ கார் பரிசாக வழங்கியதாகக் கூறப்பட்டது. இது குறித்து நோராவிடம் விசாரித்தபோது, `ஆரம்பத்தில் காரை வாங்கிக்கொள்ள முடிவு செய்தேன். ஆனால் பிறகு முடிவை மாற்றிக்கொண்டு கார் வேண்டாம் என்று எங்களது குடும்ப நண்பர் பாபியிடம் தெரிவித்துவிட்டோம். பாபி இது குறித்து சுகேஷிடம் பேசினார்” என விசாரணையில் தெரிவித்துள்ளார். பாபியிடம் `உங்களுக்கு வேண்டுமானால் அந்த காரை வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று தெரிவித்தேன் என்றும் நோரா தெரிவித்திருந்தார். ஆனால் நோராவிடம் நேரடியாக கார் பரிசளித்ததாக சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

டெல்லி போலீஸ் விசாரணை

தற்போது நோராவிடம் டெல்லி போலீஸார் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர். நான்கு மணி நேரத்துக்கும் மேலாக இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே நோராவிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை மீண்டும் அதிகாரிகள் கேட்டு உறுதி செய்துகொண்டனர்.