Published:Updated:

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவைக் கொலைசெய்தது ஏன்? - பிஸ்னோய் சகோதரர்கள் விளக்கம்!

மூஸ்வாலா, லாரன்ஸ்

பாடகர் சித்து மூஸ்வாலாவைப் படுகொலை செய்தது ஏன் என்பது குறித்து அவரைக் கொலைசெய்த சச்சின் பிஸ்னோய் தெரிவித்திருக்கிறார்.

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவைக் கொலைசெய்தது ஏன்? - பிஸ்னோய் சகோதரர்கள் விளக்கம்!

பாடகர் சித்து மூஸ்வாலாவைப் படுகொலை செய்தது ஏன் என்பது குறித்து அவரைக் கொலைசெய்த சச்சின் பிஸ்னோய் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
மூஸ்வாலா, லாரன்ஸ்

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மாத இறுதியில் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். அவரைக் கொலைசெய்ததாக சச்சின் பிஸ்னோய், கோல்டி பிரர் ஆகியோர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டனர். இதையடுத்து பஞ்சாப் அரசு பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்ட 424 பேருக்கு மீண்டும் பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், இந்தக் கொலையில் தொடர்புடைய சச்சின் பிஸ்னோய் தனியார் டிவி நிறுவனத்தைத் தொடர்புகொண்டு ``நாங்கள்தான் சித்து மூஸ்வாலாவைக் கொலைசெய்தோம். எங்கள் சகோதரனைக் கொலைசெய்ததற்கு பழிவாங்கும் விதமாகவே சித்து மூஸ்வாலாவைக் கொலைசெய்தோம்'' என்று தெரிவித்தார். நவீன ஆயுதங்கள் எங்கிருந்து கிடைத்தன என்று கேட்டதற்கு, அது குறித்து தெரிவிக்க மறுத்த சச்சின், தங்களிடம் ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும் நவீன ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்தார்.

சித்து மூஸ் வாலா
சித்து மூஸ் வாலா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும், ``சித்து மூஸ்வாலா கூட்டத்தினர் இரண்டு நாள்களில் மன்கிரத் என்பவரைப் படுகொலை செய்வதாக மிரட்டியிருக்கின்றனர். மிரட்டலால் ஒன்றும் ஆகப்போவதில்லை. எங்களிடம் அபாயகரமான ஆயுதங்கள் இருக்கின்றன. விரைவில் வேறுகூட்டத்தைச் சேர்ந்தவர்களைக் கொலைசெய்யப்போகிறோம்" என்றும் தெரிவித்திருக்கிறார். ஆனால், யார் என்பதை சச்சின் தெரிவிக்க மறுத்துவிட்டார். மூஸ்வாலா படுகொலைக்குப் பிறகு பாடகர் மன்கிரத்துக்கு கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, அவருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே மூஸ்வாலா படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட காரை கொடுத்து உதவிய இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

போலீஸ்
போலீஸ்

பதேஹாபாத் என்ற இடத்தில் அதிரடி ரெய்டு நடத்தி பவன், கான் ஆகிய இரண்டு பேரையும் கைதுசெய்தனர். லாரன்ஸ் பிஸ்னோவும் தாங்கள் சித்து மூஸ்வாலாவைக் கொலைசெய்ததாக போலீஸில் ஒப்புக்கொண்டிருக்கிறார். போலீஸார் சித்துவை வேறு ஒரு வழங்கில் தங்களது காவலில் எடுத்து விசாரித்தபோது இதனை தெரிவித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism