Published:Updated:

`இது காதலிக்கும் இடமில்லை' - வேலையைவிட்டு நீக்கிய தம்பதி; ஆத்திரத்தில் கொலைசெய்த இளைஞர்!

கொலை

அழகுநிலையத்தில் பணியாற்றிய இருவர் காதலித்துவந்தது தெரியவந்திருக்கிறது. இதனால், `இது காதலிப்பதற்கான இடமல்ல...' எனக் கூறி, இருவரையும் தம்பதியர் வேலையைவிட்டு நீக்கியிருக்கிறார்கள்.

`இது காதலிக்கும் இடமில்லை' - வேலையைவிட்டு நீக்கிய தம்பதி; ஆத்திரத்தில் கொலைசெய்த இளைஞர்!

அழகுநிலையத்தில் பணியாற்றிய இருவர் காதலித்துவந்தது தெரியவந்திருக்கிறது. இதனால், `இது காதலிப்பதற்கான இடமல்ல...' எனக் கூறி, இருவரையும் தம்பதியர் வேலையைவிட்டு நீக்கியிருக்கிறார்கள்.

Published:Updated:
கொலை

கிழக்கு டெல்லியிலுள்ள அசோக் நகரில் வசிப்பவர் சமீர் அஹுஜா. இவர், தான் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ்த்தளத்தில் அழகுநிலையம் ஒன்றை நடத்திவந்திருக்கிறார். அழகுநிலையத்தை இவரின் மனைவி ஷாலு அஹுஜா கவனித்துவந்திருக்கிறார். இந்த நிலையில், அவரது அழகு நிலையத்தில் பணியாற்றிய இருவர் காதலித்துவந்தது தெரியவந்திருக்கிறது. இதனால், `இது காதலிப்பதற்கான இடமல்ல...' எனக் கூறி, இருவரையும் தம்பதியர் வேலையைவிட்டு நீக்கியிருக்கிறார்கள். அதனால் சமீர் அஹுஜாவுக்கும், காதலர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்திருக்கிறது.

காதல்
காதல்
சித்திரிப்புப் படம்

இந்தச் சம்பவத்தால் அவமானப்படுத்தப்பட்டதாக நினைத்த இளைஞர், தம்பதியைக் கொலைசெய்ய திட்டமிட்டிருக்கிறார். தன் திட்டத்தைக் காதலியிடமும், இன்னும் நான்கு நண்பர்களிடமும் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் இன்று காலை 8 மணியளவில் சமீர் அஹுஜா வீட்டுக்கு பைக்கில் சென்றனர். தரைத்தளத்தில் ஷாலு அஹுஜா-வும், அவரின் வீட்டுப் பணியாளர் சப்னமும் இருந்திருக்கிறார்கள்.

அங்கிருந்த பெண்களைக் கழுத்தை அறுத்துக் கொலைசெய்த அந்தக் கும்பல், முதல் தளத்திலிருந்த சமீர் அஹுஜாவையும், தலையில் அடித்துக் கொலை செய்திருக்கிறது. அதன் பிறகு அனைவரும் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்கள். நடந்தது அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி-யில் பதிவாகியிருந்தன.

கொலை
கொலை

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரிகள், ``தம்பதியர் முன்விரோதம் காரணமாகக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். கொலையாளிகளில் இருவரைக் கைதுசெய்திருக்கிறோம். தம்பதியரின் இரண்டு வயது மகள் ஒரு போர்வைக்குள் இருந்ததால், கொலையாளிகளுக்குத் தெரியவில்லை. முக்கியக் குற்றவாளி உட்பட நான்கு பேரைத் தீவிரமாகத் தேடிவருகிறோம்" எனத் தெரிவித்திருக்கின்றனர்.