Published:Updated:

தேனி: பிரபல கம்பெனிகளின் பெயரில் போலி பீடிக்கட்டுகள்! - கடைக்குக் கடை சப்ளை செய்தவர் சிக்கினார்!

கம்பம் நகர் தெற்கு காவல் நிலையம்
கம்பம் நகர் தெற்கு காவல் நிலையம்

தேனியில் பிரபல கம்பெனிகளின் பெயரில் போலியாக பீடிகளைத் தயார் செய்து, கடைகளில் சப்ளை செய்தவரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். அவரிடமிருந்து, ரூ.1,67,820 மதிப்புள்ள ஆறு பண்டல் போலி பீடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருநெல்வேலியைத் தலைமையிடமாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுவரும் பிரபலமான பீடி கம்பெனிகளின் பெயரில் போலியாக தேனி மாவட்டம் கம்பம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக விற்பனை செய்யப்பட்டுவந்திருக்கிறது. இது குறித்து, போலி லேபிள்கள் ஒட்டப்பட்ட ஒரிஜினல் கம்பெனிகளுக்கு பீடியின் தரம் குறித்துப் புகார்களும் பறந்துள்ளன. இதையடுத்து, தேனியைச் சேர்ந்த பிரபல பீடி நிறுவனத்தின் மேலாளரான அற்புதானந்தா, கம்பம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள கடைகளில் சோதனை செய்தார்.

நாகூர் கனியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போலி பீடி பண்டல்கள்
நாகூர் கனியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போலி பீடி பண்டல்கள்

இதில், கடைகளில் போலி பீடி விற்பனை செய்யப்பட்டுவருவது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், கம்பம் கே.வி.ஆர்.தெருவைச் சேர்ந்த நாகூர் கனி என்பவர், அந்தப் பகுதியிலுள்ள கடைகளுக்கு சப்ளை செய்துவருவது தெரியவந்தது. இதையடுத்து தேனி ஹவுஸ் ரோட்டைச் சேர்ந்த பிரபல பீடி நிறுவனத்தின் மேலாளரான அற்புதானந்தா, கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரைத் தொடர்ந்து போலீஸார், நாகூர் கனியின் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினர். அங்கு, பிரபல ஐந்து கம்பெனிகளின் பெயரில் ரூ.1,67,820 மதிப்புடைய ஆறு பெரிய பீடி பண்டல்களைப் பறிமுதல் செய்தனர். கைதுசெய்யப்பட்ட நாகூர் கனியிடம் போலி பீடி பண்டல்கள் எங்கு தயார் செய்யப்படுகின்றன... எங்கெல்லாம் விற்பனைக்காகக் கொண்டு செல்லப்படுகின்றன என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

கைதுசெய்யப்பட்ட நாகூர் கனி
கைதுசெய்யப்பட்ட நாகூர் கனி

``கம்பத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு வந்த 13 போலி பீடி பண்டல்களில் ஆறு பண்டல்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பதுக்கிவைக்கப்பட்டுள்ள ஏழு பண்டல்கள் குறித்தும் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறோம்” என்றார் பீடி கம்பெனியின் மேலாளர் அற்புதானந்தா. போலி பீடி பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

’ஆண்டிப்பட்டி – தேனி’ ரயில் பாதையில் சோதனை ஓட்டம் வெற்றி; மகிழ்ச்சியில் தேனி மக்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு