Published:Updated:

சேலம்: `சினிமாவில் நடிக்கவைக்கிறோம்’ - பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட போலி இயக்குநர் கைது!

அடுக்குமாடிக் குடியிருப்பு

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும், நடிக்கக் கற்றுத்தருவதாகவும் கூறி பெண்களிடம் பாலியல்ரீதியாக அத்துமீறிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சேலம்: `சினிமாவில் நடிக்கவைக்கிறோம்’ - பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட போலி இயக்குநர் கைது!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும், நடிக்கக் கற்றுத்தருவதாகவும் கூறி பெண்களிடம் பாலியல்ரீதியாக அத்துமீறிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
அடுக்குமாடிக் குடியிருப்பு

சேலம் மாநகர், ஸ்டேட் பேங்க் ஆபீஸர்ஸ் காலனி அருகே ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும், நடிக்கக் கற்றுத்தருவதாகவும் கூறி ஒரு கும்பல் பல பேரிடம் பணத்தைச் சுருட்டியுள்ளது.

இது குறித்து நேற்று இரும்பாலைப் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், ``கடந்த சில மாதங்களுக்கு முன்பு எடப்பாடியைச் சேர்ந்த வேலு என்பவர் நடிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்க் கூறி விளம்பரம் அளித்திருந்ததைப் பார்த்து சேலம் ஆபீஸர்ஸ் காலனியிலுள்ள அவரின் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன்.

வேலு
வேலு

அப்போது வேலு நடிப்பதற்கு வாய்ப்பு வேண்டுமானால் பணம் கொடுக்க வேண்டும் என்றார். நானும் பணம் கொடுத்தேன். ஆனால், அவர் எந்தவித வாய்ப்பும் வாங்கித் தரவில்லை. கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டால், தரமால் அலைக்கழித்துவருகிறார்” என்று தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில், சூரமங்கலம் போலீஸார் சம்பந்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது, அங்குள்ள சிசிடிவி கேமாராக்களை ஆய்வுசெய்தபோது, பெண்களிடம் பாலியல்ரீதியாக அத்துமீறி வந்ததும் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட வேலு, அவரின் உதவியாளர் ஜெயஜோதி ஆகியோர் கைதுசெய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.