Published:Updated:

சேலம்: நிதி நிறுவன அதிபர் கடத்தல்... மனைவி புகாரின் பெயரில் போலீஸ் விசாரணை!

கடத்தல் ( representational image )

சேலத்தில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டவரை மர்மகும்பல் கடத்தியதாக புகார் எழுந்திருக்கிறது.

சேலம்: நிதி நிறுவன அதிபர் கடத்தல்... மனைவி புகாரின் பெயரில் போலீஸ் விசாரணை!

சேலத்தில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டவரை மர்மகும்பல் கடத்தியதாக புகார் எழுந்திருக்கிறது.

Published:Updated:
கடத்தல் ( representational image )

சேலம், அம்மாபேட்டை மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் 2007 முதல் 2014 வரை அக்க்ஷயா என்ற நிதி நிறுவனம் நடத்தி மக்களின் பணத்தை சுருட்டி கொண்டு திவால் நோட்டீஸ் கொடுத்து தப்பித்துக் கொண்டார் எனக் கூறப்படுகிறது. பின்னர் 2018-ல் அமுத்சுரபி எனும் கூட்டுறவு சங்கத்தை தொடங்கி, இரு மடங்கு பணம், அதிக வட்டி என முதலீட்டாளர்களுக்கு பல சலுகைகள் அறிவித்து பல கோடி ரூபாயை வசூலித்துள்ளனர். ஆனால், அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மோசடியில் ஈடுபட்டது தெரிந்ததால் 100க்கும் மேற்பட்ட மக்கள் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தனர். அதன்மூலம் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அமுத்சுரபி கூட்டுறவு சங்கம்
அமுத்சுரபி கூட்டுறவு சங்கம்

இந்நிலையில் அம்மாபேட்டை மின்சார வாரிய காலனியில் குடும்பத்துடன் வசித்த ராஜேந்திரனை நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு மர்மநபர்கள் சிலர் காரில் கடத்தி விட்டதாக அவரின் மனைவி சரண்யா அம்மாபேட்டை போலீஸில் புகார் அளித்துள்ளார். போலீஸ் வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர்.

இது குறித்து காவல்துறை வட்டாரங்களில் பேசியபோது, "சம்பந்தப்பட்ட ராஜேந்திரன் நான்குக்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களை தொடங்கி மக்களிடம் பணம் வசூலித்து பின் நஷ்டம் ஏற்பட்டதாக கணக்கு காட்டி தப்பித்ததாக சொல்லப்படுகிறது. இதில், பணம் இழந்த முதலீட்டாளர்கள் பலர் அவர்களை தேடி வருகின்றனர். அவர்களுக்கு பயந்து ராஜேந்திரனை மர்மநபர்கள் கடத்தியதாக மனைவி மூலம் புகார் அளித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடக்கிறது. மேலும் உண்மையில் கடத்தப்பட்டிருந்தாலும் தகுந்த விசாரணையின் அடிப்படையில் மீட்கப்படுவார்" என்றனர்.