Published:Updated:

சேலம்: மண்ணெண்ணெய் குண்டு வீசிய விவகாரம்; தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இருவர் கைது!

கைது

சேலம், அம்மாபேட்டை பகுதியில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட இருவர்மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையாளர் உத்தரவு.

சேலம், பொன்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ராஜன் என்பவர் வீட்டில் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி  மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் குண்டு வீசிவிட்டுச் சென்றனர். இதில் அதிர்ஷ்டவசமாக எந்தவித சேதமும் ஏற்படவில்லை. இது தொடர்பாக ராஜன் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து ஏழு பேரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த காதர் உசேன், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த சையத் அலி ஆகிய இருவர் மண்ணெண்ணெய் குண்டு வீசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைதுசெய்து விசாரணை செய்ததில், தமிழகம் முழுவதும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினரைக் குறிவைத்து தேசிய புலனாய்வு முகமை தொடர் சோதனை நடத்திவருவதாகக் கூறி அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இதுப்போன்ற செயல்களில் ஈடுப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

சேலம்: மண்ணெண்ணெய் குண்டு வீசிய விவகாரம்; தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இருவர்  கைது!

இந்த நிலையில், சையத் அலி மற்றும் காதர் உசேன் ஆகியோர் இருமதத்தினரிடையே விரோத மனப்பான்மையை ஏற்படுத்த முயன்றதாகவும், பொது ஒழுங்கு மற்றும் மாநில பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கிற நடவடிக்கைகளில் ஈடுபட்டக் காரணத்திற்காகவும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி செய்த குற்றத்திற்காக அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் கணேசன், உதவி ஆணையாளர் சரவணகுமார் ஆகியோர் துணை ஆணையாளர் மாடசாமி மூலமாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்ய சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா உத்தரவிட்டார்.