Published:Updated:

`என் அம்மாவிடம் தினமும் ஏன் தகராறு செய்றீங்க?'- நள்ளிரவில் பெரியப்பாவைக் கொன்ற சிறுவன்

தன் தாயை தவறாகப் பேசிய பெரியப்பாவை உருட்டுக் கட்டையால் சரமாரியாக அடித்துக் கொன்றிருக்கிறார், சேலத்தைச் சேர்ந்த சிறுவன்.

கொலை
கொலை

சேலம் ஜங்ஷனை அடுத்த ரெட்டிப்பட்டி மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர், சரவணன் (40). கட்டட வேலைக்குச் சென்றுவருகிறார். இவரது மனைவி, இரண்டு மகள்களோடு வசித்துவருகிறார். தன் வீட்டுக்கு அருகே அம்மா மாதம்மாள், தம்பி முருகேசன், தம்பி மனைவி ஜீவா இவர்களுடைய இரண்டு மகன்கள் ஹரிகிருஷ்ணன், கோகுலகிருஷ்ணன் ஆகியோரும் வசித்துவருகிறார்கள்.

சரவணன்
சரவணன்
எம்.விஜயகுமார்

சரவணன், அடிக்கடி மது அருந்திவிட்டு தன் தம்பி வீட்டுக்கு வந்து அம்மா மற்றும் தம்பி குடும்பத்தினரோடு வாய்த் தகராறு செய்து சண்டை போடுவாராம். இதனால் சரவணனிடம் அவருடைய அம்மாவும், தம்பி குடும்பத்தினரும் பேச மாட்டார்கள். ஆனாலும் சரவணன் மது அருந்திவிட்டு மாதம்மாள், தம்பி குடும்பத்தையும் அசிங்கமாகத் திட்டிவந்துள்ளார். 15 வயதான தன் தம்பி மகனான ஹரிகிருஷ்ணனையும் திட்டிவந்துள்ளார். பிறகு, அக்கம் பக்கத்தினர் தலையிட்டு சமாதானம் செய்துவைத்துள்ளனர்.

`என் மனைவியைக் கொலை செய்துவிட்டேன்!'- ரத்தம் படிந்த கத்தியோடு காவல் நிலையத்துக்குச் சென்ற கணவன்

இந்நிலையில், நேற்று நள்ளிரவு மது குடித்துவிட்டு தம் தம்பி முருகேசன் வீட்டுக்கு வந்து ஹரிகிருஷ்ணன் அம்மாவிடம் தகராறு செய்துள்ளார் சரவணன். சிறுவன் ஹரிகிருஷ்ணன், ஏன் இப்படிக் குடித்துவிட்டு வந்து தகராறு செய்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். இதனால் கோபம் அடைந்த சரவணன், அசிங்கமான வார்த்தைகளால் ஹரிகிருஷ்ணனைத் திட்டியதோடு, அம்மாவையும் மோசமான வார்த்தைகளில் திட்டி இருக்கிறார்.

`என் மனைவியைக் கொலை செய்துவிட்டேன்!'- ரத்தம் படிந்த கத்தியோடு காவல் நிலையத்துக்குச் சென்ற கணவன்

இதனால் கோபமடைந்த சிறுவன் ஹரிகிருஷ்ணன், அருகில் கிடந்த உருட்டுக்கடையை எடுத்து, தன் பெரியப்பாவை கண்முன் தெரியாமல் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். இதில், சரவணன் சரிந்து கீழே விழுந்து இறந்துள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், சூரமங்கலம் காவல்துறை இன்ஸ்பெக்டர் செந்தில்குமாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர், சிறுவன் ஹரிகிருஷ்ணனைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டார். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.