Published:Updated:

சேலம் காவல் நிலையத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம்?! - ஆட்சியரிடம் புகார்தாரர்கள் மனு

கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர்விட்ட மனுதாரர்கள்.'

``நேரில் விசாரணைக்கு வரும் போலீஸாருக்குச் செலவுக்குப் பணம் கொடுத்தாத்தான் எஃப்.ஐ.ஆரே போடுறாங்க. இல்லைன்னா `நடவடிக்கையெல்லாம் எடுக்க முடியாது, உன்னால முடிஞ்சதைப் பாத்துக்க’னு சொல்றாங்க.’ - கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர்விட்ட மனுதாரர்கள்.

சேலம் காவல் நிலையத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம்?! - ஆட்சியரிடம் புகார்தாரர்கள் மனு

``நேரில் விசாரணைக்கு வரும் போலீஸாருக்குச் செலவுக்குப் பணம் கொடுத்தாத்தான் எஃப்.ஐ.ஆரே போடுறாங்க. இல்லைன்னா `நடவடிக்கையெல்லாம் எடுக்க முடியாது, உன்னால முடிஞ்சதைப் பாத்துக்க’னு சொல்றாங்க.’ - கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர்விட்ட மனுதாரர்கள்.

Published:Updated:
கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர்விட்ட மனுதாரர்கள்.'

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு வெவ்வேறு குடும்பத்தினர் ஒன்றாக மனு அளிக்க வந்திருந்தனர். அவர்களைத் தனியாக அழைத்துப் பேசினோம், ``கருமந்துறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பல நாள்கள் ஆகுது. ஆனா நடவடிக்கை எடுக்க மாட்றாங்க, நடவடிக்கை எடுக்கணும்னா பணம் கொடுங்கனு கேட்குறாங்க போலீஸார் சிலர்” என்றனர்.

அவர்களிடம் விசாரித்தபோது, சேலம் சின்ன கல்ராயன்மலை, தேக்கப்பட்டு நடுவீதியைச் சேர்ந்தவர்கள் அண்ணாமலை, அம்பிகா தம்பதியர். அவர்கள் அளித்த புகாரில், ``எங்களுக்குச் சொந்தமான விவசாய நிலம் நாங்கள் குடியிருக்கும் பகுதியிலிருந்து கால் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வயலுக்கு அருகில் நிலம் வைத்திருந்த பொன்னுசாமி என்பவரின் மனைவி பூச்சியம்மாள் எங்களிடமிருந்து 40 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கினார்.

அண்ணாமலை, அம்பிகா தம்பதியர்
அண்ணாமலை, அம்பிகா தம்பதியர்

நாங்க விற்கும்போதே `பட்டா நிலம்தான் உங்களுக்குச் சொந்தம். மீதமுள்ள புறம்போக்கு நிலம் எங்களுடையது’ என்று சொல்லித்தான் நிலத்தை வித்தோம். ஆனா சமீபத்தில் எங்களுடைய அனுபவத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் ஆயில் இன்ஜின் வைக்க முற்பட்டனர். அதைக் கேட்கப்போன என்னையும், என் மனைவியையும் பொன்னுசாமி, அவரின் மனைவி பூச்சியம்மாள் மற்றும் சிலர் கட்டையால் தாக்கினர். இதனால் கடந்த மே 1-ம் தேதி ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தோம். அப்போது விசாரணை செய்ய வந்த கருமந்துறை போலீஸார் ஒருவர் விசாரித்து தகவல்களைப் பெற்றுக்கொண்டு `செலவுக்கு 500 ரூபாய் கொடுங்க’ என்று வாங்கிட்டு போனாரு. ஆனா எந்தவித நடவடிக்கையையும் சம்பந்தப்பட்டவங்க மேல எடுக்கலை. அதனால மே 5-ம் தேதி நானும் என் மனைவியும் கருமந்துறை போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயிருந்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அங்கே இருந்த போலீஸ் ஒருத்தர் `சும்மா விசாரணை பண்ண முடியாது. ஒரு 2,000 ரூபாய் கொடுத்துட்டுப் போ. நாளைக்கு விசாரிக்கிறதுக்கு போலீஸை அனுப்புறேன்’னு சொன்னார், நாங்களும் அதை நம்பி பணத்தைக் கொடுத்துட்டு வந்தோம். மறுநாள் ஒரு போலீஸ் வந்து நிலத்தைப் பார்த்துட்டு, `சரி நடவடிக்கை எடுத்துடலாம். பெட்ரோலுக்கு ஒரு 500 ரூபாய் கொடுங்க’னு சொல்லி வாங்கிட்டுப் போனாருங்க. ஆனா, இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காம இருக்காங்க’’ என்றார்.

அதே போன்று மனு அளிக்க வந்திருந்த மற்றொரு குடும்பத்தினரிடம் பேசியபோது, ``என் பெயர் சசிலா. என்னோட கணவர் பெயர் சகாதேவன், நாங்க கருமந்துறை வடக்குநாடு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே குடியிருந்துவருகிறோம். அதே பகுதியைச் சேர்ந்த ஜெயா என்பவரின் மகள் வன்மதி என்னுடன் நன்றாகப் பழகிவந்தார். அவர் திடீரென்று அவர் காதலித்த பையனுடன் ஓடிவிட்டார்.

சசிலா-சகாதேவன் தம்பதியர்
சசிலா-சகாதேவன் தம்பதியர்

அதற்காக கடந்த ஏப்ரல் 30-ம் தேதி மாலை நான் வீட்டில் இருந்தபோது, எங்கள் பகுதியைச் சேர்ந்த ஜெயா என்பவரும், அவரின் கணவர் வெங்கடேஷ், ஜெயாவின் தங்கை சங்கீதா மற்றும் சிலர் என்னை வீடு புகுந்து கொச்சை வார்த்தைகளால் திட்டி `எதற்கு என் மகளை இன்னொருத்தவனோட ஓட விட்டே?’ என்று சொல்லி அடித்தனர். உடனே என் கணவர் ஓடி வந்து தடுக்க வந்தார். அவரையும், கட்டையால் தாக்கினர். இது குறித்து கருமந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். புகாரை ஏற்ற சப்-இன்ஸ்பெக்டர் கோபால் உண்மைக்குப் புறம்பாக, குற்றவாளிகளைத் தப்பிக்கவிடும்விதமாக வழக்கு பதிவு செய்தார். இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு `ஐந்து பேர் மேல வழக்கு பதிவு போட முடியாது. மூன்று பேர் மீதுதான் வழக்கு பதிவு போடப்படும்’ என்று அதட்டிப் பேசினார். மேலும் எதிர்த்தரப்பினரிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு இதுவரைக்கும் குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உள்ளனர்’’ என்று கூறினார்.

இது குறித்து வாழப்பாடி டி.எஸ்.பி முத்துசாமியிடம் பேசினோம். ``சம்பந்தப்பட்ட இரண்டு புகார்கள் குறித்தும் விசாரணை செய்துகொண்டிருக்கிறோம். மனுதாரரிடம் எந்தவித காரணத்துக்காகவும் போலீஸார் பணம் கையூட்டுப் பெறவில்லை. அப்படியிருந்தால் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism