Published:Updated:

சேலம் கடத்தல் விவகாரம்: பிரபல நகைக்கடை அதிபர், மேலாளருடன் கடத்தப்பட்ட ரெளடியும் கைது - என்ன நடந்தது?

கடத்தல் ( சித்திரிப்புப் படம் )

கூலிப்படையை ஏவி, ரெளடியைக் கடத்திய நகைக்கடை உரிமையாளர், மேலாளர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம் கடத்தல் விவகாரம்: பிரபல நகைக்கடை அதிபர், மேலாளருடன் கடத்தப்பட்ட ரெளடியும் கைது - என்ன நடந்தது?

கூலிப்படையை ஏவி, ரெளடியைக் கடத்திய நகைக்கடை உரிமையாளர், மேலாளர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கடத்தல் ( சித்திரிப்புப் படம் )

சேலம், கோரிமேடு பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் பூபதி. பிரபல ரெளடியான இவர் நேற்று முன்தினம் இரவு அழகாபுரத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவரிடம், கோரிமேட்டில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த கும்பல் ஒன்று இருவரையும் சரமாரியாகத் தாக்கி, காரில் கடத்திச் சென்றிருக்கிறது. இதில், பிரவீன் குமார் சிறிது தூரத்திலேயே காரிலிருந்து குதித்து, தப்பித்தார்.

சேலம் கடத்தல் விவகாரம்: பிரபல நகைக்கடை அதிபர், மேலாளருடன் கடத்தப்பட்ட ரெளடியும் கைது - என்ன நடந்தது?

பின்னர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரவீன் குமார், அழகாபுரம் போலீஸாரிடம் அளித்த தகவலின் அடிப்படையில், போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இதற்காக மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா இரண்டு தனிப்படைகளை அமைத்தார். அந்த இரண்டு தனிப்படையினரும் பூபதி திருவண்ணாமலைக்கு அருகே இருப்பதைக் கண்டறிந்து அங்கு விரைந்து சென்றனர். அப்போது கடத்தல் கும்பல் போலீஸார் நெருங்கி வருவதை அறிந்ததும், கீழ்பென்னாத்தூர் பகுதியில் பூபதியையும், அவர்களது காரையும் அங்கேயே விட்டுவிட்டு தப்பியது. நேற்று இரவு தனிப்படை போலீஸார் பூபதியை காருடன் மீட்டனர். பின்னர், அவரை சேலத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில், சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியிலுள்ள பிரபல நகைக் கடையான செல்வமாளிகையின் உரிமையாளர் ஏகாம்பரம் ஆள்வைத்துக் கடத்தியதாகக் கூறியிருக்கிறார் பூபதி. காரணம், சமீபத்தில் ஏகாம்பரத்துக்குச் சொந்தமான நிலம் வீராணத்தில் இருந்ததாகவும், அந்த நிலத்தின் மதிப்பு 12 கோடி ரூபாய் இருக்கும் என்றும், அதை விற்றுத் தருவதாகக் கூறி நகைக்கடை உரிமையாளரிடமிருந்து அசல் பத்திரத்தை பூபதி வாங்கிச் சென்றிருக்கிறார். ஆனால், நிலத்தை விற்றுத் தரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஏகாம்பரம், பத்திரத்தைத் தருமாறு கேட்டிருக்கிறார்.

சேலம் கடத்தல் விவகாரம்: பிரபல நகைக்கடை அதிபர், மேலாளருடன் கடத்தப்பட்ட ரெளடியும் கைது - என்ன நடந்தது?

ஆனால், பூபதி பத்திரத்தைத் தர மறுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த நகைக்கடை உரிமையாளர் ஏகாம்பரம், தனது கடையின் மேலாளர் பாபுவிடம் சொல்லி, அன்னதானப்பட்டி பிரபாகரன் எனும் பிரபல ரெளடியின் மூலம் ஒரு கூலிப்படை கும்பலைச் சேர்த்து பூபதியைக் கடத்தியது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்த வழக்கில், கடத்தப்பட்ட பூபதி பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதாகவும், நகைக்கடை உரிமையாளர் ஏகாம்பரமும், மேலாளர் பாபுவும் கூலிப்படையுடன் சேர்ந்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் கூறி மூன்று பேரும் கைதுசெய்யப்பட்டனர்.

பூபதி
பூபதி

மேலும் கடத்தலுக்கு உதவிகரமாக இருந்த கூலிப்படைக் கும்பலை போலீஸார் வலைவிரித்து தேடிவருவதுடன், தன்னைப் பத்திரிகையாளர் என்று கூறி வலம்வந்த பிரவீன் குமார் தலைமறைவாக இருப்பதாகவும், அவருக்கும் பிரபல ரெளடிக்கும் என்ன தொடர்பு என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை செய்துவருகின்றனர்.