Published:Updated:

கந்துவட்டி கொடுமை: குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற மெக்கானிக் - அதிமுக பிரமுகர்மீது புகார்

தீக்குளிக்க முயன்ற சம்பவம்

கந்துவட்டி கொடுமையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டூ வீலர் மெக்கானிக் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கந்துவட்டி கொடுமை: குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற மெக்கானிக் - அதிமுக பிரமுகர்மீது புகார்

கந்துவட்டி கொடுமையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டூ வீலர் மெக்கானிக் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
தீக்குளிக்க முயன்ற சம்பவம்

சேலம் மகுடஞ்சாவடியைச் சேர்ந்தவர் இளங்கோவன். டூ வீலர் மெக்கானிக்காக இருந்துவருகிறார். நேற்று காலை தன் மனைவி, இரண்டு மகள்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டார். அவர்களை மீட்டு போலீஸார் விசாரிக்கையில், ``எனது மகளின் படிப்புக்காக கடந்த 2013-ம் ஆண்டு இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான ஆறுமுகம் என்பவரிடம் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். அதற்கு மாதா மாதம் வட்டி செலுத்திவந்தேன். ஆனால் கொரோனா காலகட்டத்தில் வேலையில்லாமல் மிகவும் நெருக்கடியாக இருந்ததால், சரிவர வட்டியைக் கட்ட முடியவில்லை.

இந்நிலையில் அசல் தொகை கட்டிய பிறகும், வட்டித் தொகையைக் கட்டவில்லை என்று அவரும், அவரின் மகன் நடேசன் என்பவரும் எனது வீட்டுக்கு வந்து பெண் பிள்ளைகள் என்றுகூடப் பார்க்காமல் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அசிங்கமாகப் பேசினர்.

இளங்கோவன் குடும்பத்துடன்
இளங்கோவன் குடும்பத்துடன்

இது குறித்து நான் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்திருந்தேன். அதன் மூலம் எங்களைத் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட அதிகாரி ஒருவர் நடந்தவற்றை விசாரித்தார். இந்த விஷயம் ஆறுமுகத்துக்குத் தெரியவர, எனது வீட்டுக்கு வந்து கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே நாங்கள் நியாயம் கேட்டுப் போராடிப் பார்த்தோம். அவர் கட்சிப் பிரமுகராக இருப்பதால், எல்லா அதிகாரிகளிடமும் நேரடியாகப் பேசி, எங்களுடைய மனுவை ஏற்க மறுக்கின்றனர். அதனால் குடும்பத்துடன் சாகலாம் என்கிற முடிவுக்கு வந்தோம்” எனக் கண்ணீருடன் கூறினார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!