Published:Updated:

`இரண்டு ஆண்டுகளில் சல்மான் கானைக் கொல்ல 2-வது முயற்சி!’ - யார் இந்த ரௌடி லாரன்ஸ் பீஷ்னோய்?

சல்மான் கான்

கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட பஞ்சாப் கேங்ஸ்டர் லாரன்ஸ் பீஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ரௌடி ஒருவரை விசாரித்த போலீஸாருக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது.

`இரண்டு ஆண்டுகளில் சல்மான் கானைக் கொல்ல 2-வது முயற்சி!’ - யார் இந்த ரௌடி லாரன்ஸ் பீஷ்னோய்?

கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட பஞ்சாப் கேங்ஸ்டர் லாரன்ஸ் பீஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ரௌடி ஒருவரை விசாரித்த போலீஸாருக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது.

Published:Updated:
சல்மான் கான்

பாலிவுட்டில் கோலோச்சும் கான்களில் முக்கியமானவர் சல்மான் கான். சர்ச்சைகளுக்கும் குறைவில்லாதவர். இந்திய அளவில் பெரிய ரியாலிட்டி ஷோவாகக் கருதப்படும் இந்தி `பிக் பாஸி’ன் ஹோஸ்ட்டாகக் கடந்த பல வருடங்களாக இருப்பவர். கடந்த 1998-ம் ஆண்டு, செப்டம்பரில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு சூரஜ் பர்ஜத்யாவின் 'ஹம் சாத் சாத் ஹெயின்' பட ஷூட்டிங்குச் சென்றவர், மான் வேட்டையாடிய வழக்கில் சிக்கினார். அந்தப் படத்தில் நடித்த தபு, சயீஃப் அலிகான், சோனாலி பிந்தரே மற்றும் நீலம் கோத்தாரி ஆகியோர்மீதும் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், ராஜஸ்தான் நீதிமன்றத்தால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் சல்மான் கானுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு மேல் விசாரணையிலிருக்கும் இந்த வழக்கில் சல்மான் கான் ஜாமீனில் வெளியே இருக்கிறார். இந்த வழக்கு ஜோத்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் தற்போதும் விசாரணையில் இருக்கிறது.

சல்மான் கான்
சல்மான் கான்

மான் வேட்டையாடிய வழக்கில் ஜாமீன் பெற்றுவிட்டாலும், அது சல்மான் கானுக்கு மற்றொரு பிரச்னையைக் கொண்டுவந்தது. ராஜஸ்தானின் பீஷ்னோய் இன மக்கள் மானை தெய்வமாக வழிபடக்கூடியவர்கள். அந்த வகையில், தாங்கள் தெய்வமாக வழிபடக்கூடிய மானை வேட்டையாடிய விவகாரத்தில் சல்மான் கான்மீது அந்த இன மக்கள் 20 ஆண்டுகள் கடந்தும் தனியாத கோபத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

லாரன்ஸ் பீஷ்னோய்!

பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பிரபல ரௌடியாக வலம்வரும் லாரன்ஸ் பீஷ்னோய், மான் வேட்டையாடிய விவகாரத்தில் சல்மான் கானைக் கொலை செய்வதெனச் சபதமெடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். சல்மான் கானுக்கு நேரடியாகவே கடந்த 1998-ம் ஆண்டு, அக்டோபரில் லாரன்ஸ் பீஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்திருந்தார். பெரோஸ்பூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகனான லாரன்ஸ்மீது கொலை, கொலை முயற்சி, பணம் கேட்டு மிரட்டல், சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்தது என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. வெளிநாட்டு ஆயுதங்களை வைத்திருந்ததாக பஞ்சாபின் ஃபரீத்கோட் போலீஸார் இவரைக் கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்தனர். இவர் தற்போது, ராஜஸ்தானின் பரத்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

லாரன்ஸ் பீஷ்னோய்
லாரன்ஸ் பீஷ்னோய்

இருப்பினும், சிறையில் இருந்தபடியே கொலை உள்ளிட்டவற்றை லாரன்ஸ் திட்டமிட்டு அரங்கேற்றிவருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. போலீஸார், தன்னை போலி என்கவுன்ட்டரில் கொல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் அதனால், நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படும்போதும் தன்னைக் கைவிலங்குடன் கொண்டுவர உத்தரவிடக் கோரி இவர் தாக்கல் செய்திருந்த மனுவை சண்டிகர் மாவட்ட நீதிமன்றம் கடந்த ஜூலையில் தள்ளுபடி செய்திருந்தது. சிறையில் இருந்தபடியே சல்மான் கானைக் கொலை செய்யவும், லாரன்ஸ் பீஷ்னோய் திட்டமிட்டுவந்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பாக லாரன்ஸின் நெருங்கிய கூட்டாளியான சம்பத் நெஹ்ரா, ஹைதராபாத்தை அடுத்த சஹிபாபாத்தின் வெங்கட்ரமணா காலனி பகுதியிலிருந்து கடந்த 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் சல்மான் கானின் மும்பை பந்த்ராவிலுள்ள வீட்டை உளவு பார்த்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டு மாடியில் வந்து ரசிகர்களைச் சந்திப்பதை அப்போது வழக்கமாகக் கொண்டிருந்தார் சல்மான் கான். அப்படி அவர் ரசிகர்களைச் சந்திக்க வெளியே வரும்போது, துப்பாக்கியால் சுட்டு அவரைக் கொலை செய்ய சம்பத் நெஹ்ரா திட்டமிட்டிருந்ததாக அவரைக் கைது செய்த ஹைதராபாத் சிறப்பு அதிரடிப் படை போலீஸார் தெரிவித்தனர்.

இரண்டு ஆண்டுகள் இந்த விவகாரம் அமைதியாக இருந்த நிலையில், சல்மான் கானைக் கொல்ல லாரன்ஸ் பீஷ்னோய் இரண்டாவது முறையாக முயன்றது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

ராகுல் என்ற சன்னி!

ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் நடந்த கொலை தொடர்பாக பீஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ராகுலை போலீஸார் தேடி வந்தனர். ஃபரீதாபாத்தில் கடை நடத்திவரும் பிரஷாந்த் மிட்டல் என்பவர், ராகுல் வைத்திருந்த சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் அளித்ததாக அவரைக் கடந்த ஜூன் 24-ல் கொலை செய்தார் ராகுல். அதன் பின்னர், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்கள் வழியாக உத்தராகண்ட்டிலுள்ள பவுரி கர்வால் கிராமப் பகுதிக்கு வந்து தலைமறைவாகியிருக்கிறார்.

ராகுல் என்ற சன்னி
ராகுல் என்ற சன்னி

ஃபரிதாபாத் கொலை தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர் ராகுலைச் சுற்றி வளைத்து, நேற்று கைது செய்திருக்கிறார்கள். நொய்டாவிலிருந்து உத்தராகண்ட் கிராமத்துக்கு தனது மறைவிடம் குறித்துப் பேசுவதற்காக ராகுல் பேசிய 10 விநாடி போன் கால்தான் அவரைக் கைது செய்ய உதவியது என்கிறார்கள் போலீஸ் தரப்பில். இந்த விவகாரத்தில் ராகுலுக்கு உதவியதாக மேலும் நான்கு பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். பீஷ்னோய் கும்பலில் ஒரு வருடத்துக்கு முன்பு இணைந்த ராகுல், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் நான்கு கொலைகளைச் செய்திருப்பதாக ஃபரிதாபாத் போலீஸார் கூறுகிறார்கள். குறிபார்த்துச் சுடுவதில் திறன் பெற்றிருந்த ராகுல், அதனாலேயே குறைந்த காலகட்டத்தில் பீஷ்னோய் கும்பலில் முக்கிய இடத்தைப் பிடித்ததாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ராகுல் என்ற சன்னியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மும்பை பாந்த்ராவிலுள்ள சல்மான் கானின் கேலக்ஸி அப்பார்மென்ட்டைக் கடந்த ஜனவரி மாதம் உளவுபார்த்தது தெரியவந்துள்ளது. குறிபார்த்துச் சுடுவதில் தேர்ந்தவர் என போலீஸார் தரப்பில் சொல்லப்படும் ராகுல், பாந்த்ரா பகுதியில் இரண்டு நாள்கள் தங்கியிருந்து, சல்மான் கான் வீட்டுக்கு வருபவர்களைக் கண்காணித்துவந்திருக்கிறார். லாரன்ஸ் பீஷ்னோயின் உத்தரவுப்படியே சல்மான் கான் வீட்டை உளவு பார்த்ததாகவும் அவர் போலீஸாரிடம் சொல்லியிருக்கிறார்.

சல்மான் கான்
சல்மான் கான்

உளவு பார்த்த விவரங்களை லாரன்ஸுக்குத் தெரிவித்துவிட்டு, அவரது அனுமதிக்குப் பிறகு சல்மான் கானைக் கொல்ல ராகுல் திட்டமிட்டிருந்ததாகவும், கொரோனா ஊரடங்கால் இந்தக் கொலைத் திட்டத்தை அரங்கேற்ற முடியாமல் போனதாகவும் போலீஸார் கூறுகிறார்கள். இரண்டாவது முறையாக சல்மான் கானைக் கொலை செய்ய நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism