Published:Updated:

திருவாரூர்: வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே, நகை, பணம் கொள்ளை... ஒரே பாணியில் இரு சம்பவங்கள்!

கொள்ளை

வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே, ஒரே பாணியில், ஒரே சமயத்தில் நடைபெற்ற இந்த இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் இப்பகுதி மக்களை அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளன.

திருவாரூர்: வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே, நகை, பணம் கொள்ளை... ஒரே பாணியில் இரு சம்பவங்கள்!

வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே, ஒரே பாணியில், ஒரே சமயத்தில் நடைபெற்ற இந்த இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் இப்பகுதி மக்களை அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளன.

Published:Updated:
கொள்ளை

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே, ஒரே பாணியில், ஒரே சமயத்தில் இரண்டு வீடுகளில் மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்றிருப்பது இப்பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே நடைபெற்ற இந்தத் துணிகரச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டிருப்பதோடு, மர்ம நபர்களைப் பிடிக்க தீவிர தேடுதலில் ஈடுபட்டுவருகிறார்கள்.

திருவாரூர் காவல்துறை
திருவாரூர் காவல்துறை

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே உள்ள குன்னியூர் கிராமத்தில் வசித்துவருபவர் கமலதாசன். இவர் குன்னியூர் ஊராட்சி துணைத் தலைவராக பதவி வகித்துவருகிறார். தற்போது கோடைக்காலம் என்பதால், இரவு நேரத்தில் வீட்டில் புழுக்கமாக இருந்ததால், கமலதாசன் தன் குடும்பத்தினருடன் வீட்டின் முன்பகுதியில் படுத்து உறங்கியிருக்கிறார். அப்போது நள்ளிரவில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 6 சவரன் தங்க நகை மற்றும் 37 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிச் சென்றிருக்கிறார்கள். கமலதாசன், அவரின் குடும்பத்தினர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால், வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டதோ, பீரோவிலிருந்து நகையும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டதோ இவர்களுக்குத் தெரியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மறுநாள் காலை பொழுது விடிந்ததும், வீட்டின் பின்புறம் சென்றபோதுதான் கதவு உடைக்கப்பட்டது தெரியவந்திருக்கிறது. பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் திருட்டுப்போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கமலதாசன் இது குறித்து கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.

கொள்ளை
கொள்ளை

இதே ஊரில், இதே பாணியில், வேறொரு வீட்டிலும் நகை மற்றும் பணம் திருடப்பட்டிருக்கிறது. மந்தக்கரை தெருவில் வசித்துவருபவர் ஜெயராமன். நள்ளிரவு இவரின் வீட்டின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 10 கிராம் தங்க நகை, வெள்ளிக்கொலுசு மற்றும் 1,500 ரூபாய் பணத்தைத் திருடிச் சென்றிருக்கிறார்கள். வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே, ஒரே பாணியில், ஒரே சமயத்தில் நடைபெற்ற இந்த இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் இப்பகுதி மக்களை அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளன. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கமலதாசன் வீட்டில் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த, அதே மர்ம நபர்கள்தான் ஜெயராமன் வீட்டிலும் தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளார்களா அல்லது வேறு நபர்களா எனக் கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து, திருத்தறைப்பூண்டி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் சம்பவ இடங்களை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism