Published:Updated:

பழவூர்: மணல் கடத்தலைத் தடுத்த உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு! - இருவரைக் கைதுசெய்து விசாரணை

அரிவாள் வெட்டு விழுந்த எஸ்.ஐ பார்த்திபன்

லாரியில் மணலைக் கடத்திவந்து வீட்டின் முன்பாகக் கொட்டிவைத்திருப்பதைப் பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் அது குறித்து விசாரித்திருக்கிறர். அப்போது எதிர்பாராத வகையில் அவருக்கு அரிவாள் வெட்டு விழுந்திருக்கிறது.

பழவூர்: மணல் கடத்தலைத் தடுத்த உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு! - இருவரைக் கைதுசெய்து விசாரணை

லாரியில் மணலைக் கடத்திவந்து வீட்டின் முன்பாகக் கொட்டிவைத்திருப்பதைப் பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் அது குறித்து விசாரித்திருக்கிறர். அப்போது எதிர்பாராத வகையில் அவருக்கு அரிவாள் வெட்டு விழுந்திருக்கிறது.

Published:Updated:
அரிவாள் வெட்டு விழுந்த எஸ்.ஐ பார்த்திபன்

நெல்லை-குமரி மாவட்ட எல்லைப் பகுதியில் இருக்கும் பழவூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பவர் பார்த்திபன். அவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை தன்னுடன் கார்த்திகேயன் என்ற காவலரை அழைத்துக்கொண்டு வழக்கமான ரோந்துப் பணியைத் தொடங்கியவரை மணல் கடத்தல்காரர்கள் வெட்டியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மணிகண்டன், சங்கர்
கைதுசெய்யப்பட்ட மணிகண்டன், சங்கர்

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “அம்பலவாணபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், சங்கர் ஆகியோர் மணல் கடத்தலில் ஈடுபட்டுவந்தார்கள். இது தொடர்பாகப் பலமுறை கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள்மீது மணல் கடத்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. மீண்டும் இருவரும் மணல் திருட்டில் ஈடுபட்டுவருவதாக உதவி ஆய்வாளர் பார்த்திபனுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதனால் அவர் அம்பலவாணபுரம் பகுதிக்குச் சென்றிருக்கிறார்.

மணல் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய சங்கர், வீடுகட்டிவருகிறார். அதற்காக அனுமதியின்றி மணல் அள்ளி வந்து வீட்டின் முன்பாகக் கொட்டிவைத்திருக்கிறார். அதைப் பார்த்த உதவி ஆய்வாளர் பார்த்திபன் அவரை அழைத்து விசாரித்திருக்கிறார். அப்போது மணிகண்டனும் அங்கு வந்திருக்கிறார். இருவரும் பார்த்திபன் மற்றும் காவலர் கார்த்திகேயனை மிரட்டும் வகையில் பேசியதாகச் சொல்லப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட அரிவாள்
கைப்பற்றப்பட்ட அரிவாள்

காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சங்கர், வீட்டுக்குள் சென்று இரு அரிவாளை எடுத்து வந்திருக்கிறார். பின்னர் இருவரும் சேர்ந்து அரிவாளால் வெட்டியுள்ளனர். அதை பார்த்திபன் தடுத்திருக்கிறார். இருப்பினும் அவருக்கு முகத்தில் அரிவாள் வெட்டு விழுந்திருக்கிறது. அதற்குள் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டதால் மணிகண்டனும் சங்கரும் அங்கிருந்து தப்பியுள்ளனர்.

காயமடைந்த உதவி ஆய்வாளர் பார்த்திபன் கூடங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது தொடர்பாக கொலை முயற்சி உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்த போலீஸார் மணிகண்டன், சங்கர் ஆகிய இருவரையும் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்த அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கூடங்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்துவருகின்றனர்.