Published:Updated:

உளவுப்பிரிவு காவலருக்கு மயக்க ஊசி போட்டது ஏன்? -`ஆதாரங்களுடன் சில தகவல்கள்’ சூடுபிடிக்கும் விசாரணை!

அஜய் விக்கி - லோகேஷ்
அஜய் விக்கி - லோகேஷ்

சென்னையில் உளவுப்பிரிவில் போலீஸ்காரராகப் பணியாற்றும் ரவியை காரில் அழைத்துச் சென்று, மயக்க ஊசி போட்டு ஒரு லட்சம் ரூபாய், செல்போன் ஆகியவற்றைப் பறித்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.

சென்னை சூளைமேடு, பஜனை கோயில் மெயின் தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவர் டி.ஜி.பி அலுவலகத்தில் செயல்படும் (உளவுப்பிரிவு) எஸ்.பி.சி.ஐ.டி பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றிவருகிறார். இவர், கடந்த 28.8.2021-ம் தேதி பிற்பகலில் டி.ஜி.பி அலுவலகத்துக்கு வேலைக்குச் செல்ல புறப்பட்டார். அப்போது ரவிக்கு கடந்த 15 ஆண்டுகளாகத் தெரிந்த அதே பகுதியைச் சேர்ந்த அஜய் விக்கி என்பவர் போன் செய்து, `அங்கிள் நான் அடையாறு பகுதிக்கு என்னுடைய நண்பர் காரில் செல்கிறேன். நீங்கள் வருகிறீர்களா?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ரவி, `நான் டி.ஜி.பி அலுவலகத்துக்குச் செல்கிறேன். அதனால் வரவில்லை’ என்று கூறியிருக்கிறார். ஆனால் அஜய் விக்கி, `நானும் டி.ஜி.பி அலுவலகம் வழியாகத்தான் செல்கிறேன், வாங்க...’ என்று அழைத்திருக்கிறார். அதனால் ரவியும் அஜய் விக்கியுடன் காரில் செல்லச் சம்மதித்திருக்கிறார்.

லோகேஷ்
லோகேஷ்

இதையடுத்து அன்றைய தினம் மாலை 3 மணியளவில் தலைமைக் காவலர் ரவியை அஜய் விக்கி காரில் ஏற்றிக்கொண்டு சென்றார். காரை அஜய்யின் நண்பன் ஓட்டினார். மத்திய கைலாஷ் ஓஎம்ஆர் வழியாக கார் சென்றது. அதைப் பார்த்த ரவி, `ஏன் இந்த வழியாக செல்கிறீர்கள்?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு, `அங்கிள், இந்தப் பகுதியில் கடை ஒன்றை ஓப்பன் செய்திருக்கிறேன். அதை உங்களிடம் காண்பிக்கத்தான் இந்த வழியாகச் செல்கிறேன்’ என்று ரவியிடம் அஜய் விக்கி கூறியிருக்கிறார்.

பாத்ரூமில் கேமரா; அதிர்ச்சியடைந்த பெண்; போலீஸ் விசாரணையில் கைதான இளைஞர்!

பின்னர், சோழிங்கநல்லூரிலுள்ள ஒரு லாட்ஜுக்கு கீழே காரை நிறுத்திவிட்டு ரவியை இறங்கிவரும்படி அஜய் விக்கி கூறியிருக்கிறார். பிறகு ரூம் நம்பர் 28-க்கு ரவியை அழைத்துச் சென்றபோது, அஜய் விக்கியின் நண்பர்கள் இரண்டு பேர் அந்த அறையில் மது அருந்திக்கொண்டிருந்தனர். அதைப் பார்த்த காவலர் ரவி, `நான் சீக்கிரமாக டி.ஜி.பி அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும். அதனால் பேருந்தில் செல்கிறேன்’ என்று கூறிவிட்டு கீழே இறங்கி வந்திருக்கிறார். அதனால் அஜய் விக்கியும், அவரின் நண்பர்களும் கீழே இறங்கி ரவியை காரில் ஏறும்படி வற்புறுத்தியிருக்கின்றனர்.

போலீஸ்
போலீஸ்

ரவி, காரில் ஏறியதும் சோழிங்கநல்லூர் ஓ.எம்.ஆர் சாலையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலைவழியாக அவர்கள் சென்றனர். அப்போது அஜய்யின் நண்பர்கள் தலைவலிப்பதாகக் கூறி, கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள இரண்டு மெடிக்கல் ஷாப் முன் காரை நிறுத்தியிருக்கின்றனர். அதன் பிறகு பின் சீட்டில் அமர்ந்திருந்த அஜய்யின் நண்பன் ஒருவன் திடீரென ரவியின் வலது கையில் ஊசியைக் குத்தியிருக்கிறான். அதனால் ரவி சத்தம் போட்டிருக்கிறார். அஜய் விக்கியின் நண்பர்கள் ரவியின் கை கால்களை பிடித்திருக்கின்றனர். சிறிது நேரத்தில் ரவி மயக்கம் அடைந்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பானிபூரியால் நிகழ்ந்த சோகம்; மனைவி தற்கொலை; அதிர்ச்சியில் கணவன்; போலீஸ் விசாரணை!

இதையடுத்து ரவியின் சட்டைப் பையிலிருந்த 3,500 ரூபாய், செல்போன் ஆகியவற்றை அஜய் விக்கியும், அவரின் நண்பர்களும் எடுத்துக்கொண்டு ரவியை காரிலிருந்து கீழே இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். மயக்கத்திலிருந்த ரவிக்கு 29.8.2021-ம் தேதி அதிகாலை 4 மணியளவில் சுயநினைவு வந்திருக்கிறது. அப்போது, அவர் பெட்டிக்கடை ஒன்றின் முன் சேற்றில் (தண்ணீரில்) படுத்திருப்பதை உணர்ந்தார். பின்னர் கண்விழித்த ரவி, அந்த வழியாக சைக்கிளில் வந்த ஒருவரிடம் இது எந்த இடம் என்று விசாரித்திருக்கிறார். அப்போது அந்த நபர், `சுமைதாங்கி’ என்று கூறியிருக்கிறார்.

டி.ஜி.பி அலுவலகம்
டி.ஜி.பி அலுவலகம்

அஜய் விக்கி, அவரின் நண்பர்கள் தன்னை ஏமாற்றி செல்போன், பணத்தைப் பறித்துச் சென்றதை உணர்ந்த காவலர் ரவி, பஸ் மூலம் அடையாறுக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து ஆட்டோ மூலம் வீட்டுக்கு வந்திருக்கிறார். இதையடுத்து ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்டு சிவன் கோயில் தெருவிலுள்ள ஏடிஎம் மையத்தில் மினி ஸ்டேட்மென்ட்டை ரவி எடுத்துப் பார்த்திருக்கிறார். அப்போது அவரின் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த ரவி, நடந்த சம்பவம் குறித்து சூளைமேடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 363, 365, 342, 397 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்தார்.

ஆர்யாவைக் காப்பாற்ற முயல்கிறதா போலீஸ்… 70 லட்ச ரூபாய் மோசடியில் விடாது துரத்தும் பெண் டாக்டர்!

இந்த வழக்கை விசாரிக்க நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் ரவி ஆபிரகாம் மேற்பார்வையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. செல்போன் சிக்னல் மூலம் தலைமைக் காவலர் ரவிக்கு மயக்க ஊசி போட்டு வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்த அஜய் விக்கி, அவரின் நண்பர்களை போலீஸார் தேடிவந்தனர். அப்போது அஜய் விக்கியின் நண்பரான லோகேஷ் என்பவர் முதலில் போலீஸாரிடம் சிக்கினார். பிறகு அவர் அளித்த தகவலின்படி ஆந்திராவில் பதுங்கியிருந்த அஜய் விக்கியை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அஜய் விக்கி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த வழக்கில் புகாரளித்த தலைமைக் காவலர் ரவி குறித்துக் கைதான அஜய் விக்கி முக்கியத் தகவல் ஒன்றைக் கூறியிருக்கிறார். அதனால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

முதல் தகவல் அறிக்கை
முதல் தகவல் அறிக்கை

இது குறித்து சூளைமேடு போலீஸார் கூறுகையில். ``புகாரளித்த தலைமைக் காவலர் ரவி குறித்து கைதான இளைஞர்கள் ஆதாரங்களுடன் சில தகவல்களைக் கூறியிருக்கின்றனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்த உயரதிகாரிகள் உத்தரவிட்டிருக்கின்றனர். மேலும், தலைமைக் காவலர் ரவிக்கு போடப்பட்டது மயக்க ஊசியா அல்லது போதை ஊசியா என்றும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. மேலும் கைதான இளைஞர்களின் முழுப் பின்னணி விவரங்களைச் சேகரித்துவருகிறோம். சோழிங்கநல்லூர் லாட்ஜ் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ரவியைக் கீழே இறக்கிவிட்ட பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்துவருகிறோம். அதோடு இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரின் செல்போன் நம்பர்களையும் ஆய்வு செய்திருக்கிறோம். ரவி அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் இந்த வழக்கு அடுத்தகட்டத்துக்குச் செல்லும்" என்றனர்.

கேரளாவை அதிரவைத்த வீடியோ; போலீஸ் லாக் செய்த காருக்குள் கதறிய 3 வயது குழந்தை! - நடந்தது என்ன?
அடுத்த கட்டுரைக்கு