Published:Updated:

உர விற்பனையில் ரூ.22 லட்சம் மோசடி! - வசமாகச் சிக்கிய முதுநிலை வேளாண் பட்டதாரி இளைஞர்

சீனிவாசன்

உர விற்பனையில் மோசடி செய்து ரூ. 22 லட்சத்தைக் கையாடல் செய்த நாமக்கல்லைச் சேர்ந்த முதுநிலை வேளாண் பட்டதாரி இளைஞர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

உர விற்பனையில் ரூ.22 லட்சம் மோசடி! - வசமாகச் சிக்கிய முதுநிலை வேளாண் பட்டதாரி இளைஞர்

உர விற்பனையில் மோசடி செய்து ரூ. 22 லட்சத்தைக் கையாடல் செய்த நாமக்கல்லைச் சேர்ந்த முதுநிலை வேளாண் பட்டதாரி இளைஞர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
சீனிவாசன்

மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவனம், கிராமப்புறங்களில் விவசாயிகளுக்குத் தேவையான முக்கிய இடுபொருள்களான உரம், பூச்சிமருந்து, களைக்கொல்லி, வேளாண் உபகரணங்கள் ஆகியவற்றை இப்கோ இ-பஜார் என்னும் துணை நிறுவனம் மூலம் விற்பனை செய்துவருகிறது. தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மையத்தை நிறுவி, விவசாயிகளுக்கு அரசாங்கம் நிர்ணயித்த விலையில் தரமாக வேளாண் இடுபொருள்களை விற்பனை செய்துவருகின்றன.

அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், கொக்கராயன்பேட்டையில் செயல்பட்டுவரும் இ பஜாரில் நாமக்கல் லைன் தெருவைச் சேர்ந்த முதுநிலை வேளாண் பட்டதாரி சீனிவாசன் என்ற இளைஞர், விற்பனையாளராக கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றிவந்தார். இந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக உரம் விற்பனை செய்த ரூ 21.9 லட்சம் தொகையை கம்பெனிக்குச் செலுத்தாமல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

சீனிவாசன்
சீனிவாசன்

அதோடு, கிடங்கில் கொள்ளளவுக்கு மேல் இருப்பு இருப்பதாகக் கணக்கு காட்டியிருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த இ பஜார் மாநில அலுவலரான ஹைதராபாத்தைச் சேர்ந்த புன்னம்ராஜ், கொகக்கரராயப்பேட்டை கிளை அலுவலகத்துக்கு வந்து, தணிக்கை செய்தார். அப்போது, உர விற்பனை செய்து நிறுவனத்திடம் பணம் கட்டாமல் சீனிவாசன் தனது இந்தியன் வங்கிக் கணக்கில் செலுத்தி வந்திருப்பது தணிக்கையில் தெரியவந்தது. இதையடுத்து, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், புன்னம்ராஜ் புகார் அளித்தார். இது குறித்து, மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் லட்சுமணன், ஆய்வாளர் தெய்வசிகாமணி ஆகியோர் விசாரணை செய்து ரூ 21,91,711 கையாடல் செய்ததாக சீனிவாசனை கைதுசெய்து, திருச்செங்கோடு கிளைச் சிறையில் அடைத்தனர்.