Published:Updated:

பரமக்குடி:`1098’ எண்ணில் வந்த அழைப்பு! -13 மாணவிகளின் பாலியல் புகாரால் சிக்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்

போக்சோ வழக்கு
News
போக்சோ வழக்கு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், கடந்த டிசம்பர் 7-ம் தேதி மாவட்ட குழந்தைகள் நலக்குழு சார்பாக பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பாலியல்ரீதியில் துன்புறுத்திவருவதாக பள்ளி மாணவிகள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து இரு ஆசிரியர்கள்மீது வழக்கு பதிவு செய்து, அதில் ஒருவரைக் கைதுசெய்துள்ள சம்பவம் பரமக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், கடந்த டிசம்பர் 7-ம் தேதி மாவட்ட குழந்தைகள் நலக்குழு சார்பாக பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்போது பாலியல்ரீதியாக யாராவது துன்புறுத்தினால் `1098’ என்ற எண்ணில் தொடர்புகொண்டு புகாரளிக்கலாம் என ஆலோசனை கூறப்பட்டது.

சிறார் வதை
சிறார் வதை

இதைத் தொடர்ந்து அந்தப் பள்ளியில் பயிலும் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவிகள் சிலர் குழந்தைகள் பாதுகாப்பு இலவச எண்ணைத் தொடர்புகொண்டு, ``கணித ஆசிரியர் ஆல்பர்ட் வளவன், சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜ் ஆகியோர் அடிக்கடி தங்களைத் தொட்டும் இரட்டை அர்த்தத்திலும் பேசுகின்றனர். வீட்டுக்குச் சென்ற பிறகும் போனில் தொடர்புகொண்டு பாலியல்ரீதியாகத் தொந்தரவு செய்கின்றனர்” எனப் புகார் அளித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வசந்தகுமார் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை செய்தார். `மாணவிகள் புகார் உண்மை என உறுதியானதால் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கைதுசெய்யப்பட்ட ஆசிரியர்
கைதுசெய்யப்பட்ட ஆசிரியர்

புகாரின் அடிப்படையில் ஆசிரியர்கள் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகாருக்குள்ளான சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜைக் கைதுசெய்துள்ளனர்.

தலைமறைவாகியுள்ள மற்றோர் ஆசிரியர் ஆல்பர்ட் வளவனைத் தேடிவருகின்றனர். உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 13 மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் வேறு மாணவிகள் எவரேனும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா எனவும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.