Published:Updated:

மயக்க மருந்து கொடுத்து ஆசிரியை பாலியல் வன்கொடுமை; பள்ளி இயக்குநர் கைது - ஆசிரியையைத் தேடும் போலீஸ்

பாலியல் வன்கொடுமை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளி ஆசிரியரைப் பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி இயக்குநரைக் காவல்துறை கைதுசெய்திருக்கிறது.

மயக்க மருந்து கொடுத்து ஆசிரியை பாலியல் வன்கொடுமை; பள்ளி இயக்குநர் கைது - ஆசிரியையைத் தேடும் போலீஸ்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளி ஆசிரியரைப் பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி இயக்குநரைக் காவல்துறை கைதுசெய்திருக்கிறது.

Published:Updated:
பாலியல் வன்கொடுமை

உத்தரப்பிரதேச மாநிலம், ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றில் 22 வயது பெண், ஆசிரியையாகப் பணியாற்றிவந்தார். இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு பள்ளி இயக்குநர், பள்ளி தொடர்பான வேலைகள் இருப்பதாகக் கூறி அந்த ஆசிரியரை அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

அதை வீடியோவாகவும் பதிவுசெய்து அவ்வப்போது மிரட்டி மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ய வற்புறுத்தியிருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த ஆசிரியை, யாருடனும் பேசாமல் மௌனமாக இருந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, அந்த ஆசிரியையின் பெற்றோர் விசாரித்ததில், நடந்த சம்பவத்தைக் கூறியிருக்கிறார்.

கைது
கைது

ஆசிரியையின் பெற்றோர் குற்றம்சாட்டபட்டவரிடம் தொலைபேசியில் அழைத்து, வன்கொடுமை செய்தபோது பதிவுசெய்த வீடியோவைக் கொடுத்துவிடும்படி கெஞ்சியுள்ளனர். ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர், அலட்சியமாக பதிலளித்ததுடன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அதற்குப் பிறகு பாதிக்கப்பட்ட அந்த ஆசிரியை திடீரென மாயமானார். உடனே அந்த ஆசிரியையின் பெற்றோர் ஷாஜஹான்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், குற்றம்சாட்டப்பட்டவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காவல்துறை
காவல்துறை

மேலும், பாலியல் வன்கொடுமை செய்து பதிவாக்கிய வீடியோவையும் கைப்பற்றியிருக்கிறது காவல்துறை. மேலும், ஐபிசி பிரிவு 366 (கடத்தல்), 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஷாஜகான்பூர் எஸ்எஸ்பி ஆனந்த் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட ஆசிரியையைக் குற்றம்சாட்டப்பட்டவர்கள்தான் கடத்திச் சென்றிருக்க வேண்டும் எனப் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். எனவே, அவரை காவல்துறை தனிப்படை அமைத்துத் தேடிவருகிறது.