Published:Updated:

கொடைக்கானல்: பள்ளி மாணவி எரித்துக் கொலை? - போலீஸ் தீவிர விசாரணை!

அரசுப் பள்ளி மாணவி  எரித்துக் கொலை?
News
அரசுப் பள்ளி மாணவி  எரித்துக் கொலை?

மாணவியின் பெற்றோர் அளித்தப் புகாரின் பேரில், தாண்டிகுடி போலீஸார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து, பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் பாச்சலூரைச் சேர்ந்தவர் சத்யராஜ். இவர் அதேபகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு 2 மகள்கள், ஒரு மகன். இவர்கள் பார்சலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இதில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகள் நேற்று முன் தினம் காலை 11 மணியளவில் வகுப்பறையை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வகுப்பறைக்கு திரும்பவில்லை. இதையடுத்து பள்ளி அருகே புதர்ப் பகுதியில் சிறுமி பாதி உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்திருக்கிறார். அதைக் கண்ட சக மாணவர்கள் உடனடியாக அந்தச் சிறுமியின் பெற்றோருக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, சிறுமி மிகவும் ஆபத்தான நிலையில் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர் .

 எரிக்கப்பட்ட இடம்
எரிக்கப்பட்ட இடம்

மாணவியின் பெற்றோர் அளித்தப் புகாரின் பேரில், தாண்டிகுடி போலீஸார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து, பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது மருத்துவனையில் கூடிய மாணவியின் பெற்றோர் , உறவினர்கள் சிறுமியின் இறப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதையறிந்த பழநி எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார் மற்றும் மாவட்ட எஸ்.பி.சீனிவாசன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடலைப் பெற மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

அப்போது பழநி எம்.எல்.ஏ உயிரிழந்த மாணவியின் உறவினர்களை ஒருமையில் கடுமையாகப் பேசினார். இதனால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

பழநி எம்.எல்.ஏ
பழநி எம்.எல்.ஏ

அப்போது பாதிக்கப்பட்டவர்களிடம் குற்றவாளிகளை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இன்று மாலைக்குள் குற்றவாளிகளை கைது செய்வோம் என போலீஸார் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. அதனடிப்படையில் சிறுமியின் உடலைவாங்க பெற்றோர்கள் ஒப்புக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் திண்டுக்கல் மின்மயானத்தில் சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.