Published:Updated:

ஆம்பூர்: இன்ஸ்டாகிராமில் மூழ்கிக்கிடந்த பள்ளி மாணவி! - பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை

தற்கொலை ( சித்தரிப்புப் படம் )

ஆம்பூர் அருகே இன்ஸ்டாகிராமில் மூழ்கிக்கிடந்த மாணவியைப் பெற்றோர் கண்டித்ததால், அந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆம்பூர்: இன்ஸ்டாகிராமில் மூழ்கிக்கிடந்த பள்ளி மாணவி! - பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை

ஆம்பூர் அருகே இன்ஸ்டாகிராமில் மூழ்கிக்கிடந்த மாணவியைப் பெற்றோர் கண்டித்ததால், அந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
தற்கொலை ( சித்தரிப்புப் படம் )

ஷார்ட் வீடியோ பிளாட்ஃபார்ம்கள் நிறைய வந்துவிட்டதால், செல்போன்களிலேயே பலரும் மூழ்கிக்கிடக்கிறார்கள். அதிலும், இந்தியாவில் டிக்டாக் செயலி முடக்கப்பட்ட பின்பு, அங்கிருந்த கிரியேட்டர்களும், பார்வையாளர்களும் இன்ஸ்டா ‘ரீல்ஸ்’ பக்கம் திரும்பிவிட்டார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரீல் வீடியோக்களைப் பதிவிடுகிறார்கள். இப்படியான சமூக வலைதளப் பொழுதுபோக்கு அம்சங்களால், நிறைய ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் மூழ்கிக்கிடந்த மாணவியைக் கண்டிக்கும் வகையில் பெற்றோர் செல்போனைப் பிடுங்கியதால், மனமுடைந்த அந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆம்பூர்
ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள உடையராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன், ஆட்டோ ஓட்டுநர். இவர் மகள் மாதனூர் பகுதியிலிருக்கும் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்புப் படித்துவந்தார். இந்த நிலையில், அந்த மாணவி படிப்பில் கவனம் செலுத்தாமல், செல்போன் பயன்படுத்துவதிலேயே அதிக நேரத்தைச் செலவிட்டுவந்ததாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எந்நேரமும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களையே பார்த்துகொண்டிருந்ததால் கோபமடைந்த பெற்றோர், செல்போனைப் பிடுங்கி வைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மாணவியிடம் திரும்பவும் செல்போனைத் தராமல் இருந்ததால், மனமுடைந்த அவர் பெற்றோருடன் பேசாமல் இருந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்றிரவு சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல் அனைவரும் தூங்கச் சென்ற நிலையில், மாணவி மீனாட்சி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மாணவியின் சடலம்
மாணவியின் சடலம்

இன்று காலை தூங்கி எழுந்த பெற்றோர், மகள் தூக்கில் பிணமாகத் தொங்கியதைப் பார்த்து கதறி அழுதனர். தகவலறிந்ததும், ஆம்பூர் தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மாணவியின் சடலத்தை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக உடலை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism