Published:Updated:

மயிலாடுதுறை: வீட்டில் இருந்த சிறுமி; சிறார் வதை கொடுமை! - போக்ஸோ சட்டத்தில் வாலிபர் கைது

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

தேவா மீது போக்ஸோ மற்றும் 506 (2) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

8-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை சிறார் வதை செய்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.

சிறார் வதை
சிறார் வதை

மயிலாடுதுறை அருகேயுள்ள ஒரு கிராமத்தில் நாடோடி இனத்தைச் சேர்ந்த சிறுமி, அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் வீட்டுக்கு அருகில் பூம்புகாரைச் சேர்ந்த தேவா என்பவர் உறவினர் வீட்டுக்கு விருந்தினராக வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் வேலை நிமித்தமாக வெளியில் சென்றதை நோட்டமிட்ட தேவா, சிறுமி தனிமையில் இருப்பதை அறிந்து திடீரென அவர் வீட்டுக்குள் புகுந்து சிறார் வதை செய்துள்ளார். 'இதை யாரிடமும் சொல்லக்கூடாது. மீறி சொன்னால் உங்கள் குடும்பத்தையே கொலை செய்துடுவேன்' என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்த சிறுமி யாரிடமும் சொல்லவில்லை.

நேற்று மது அருந்திவிட்டு மீண்டும் சிறுமியை சிறார் வதை செய்துள்ளார். வலி தாள முடியாமல் துடித்த சிறுமி பெற்றோரிடம் நடந்த கொடுமையைக் கூறவே, அவர்கள் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தேவா மீது புகார் அளித்தனர்.

தேவா
தேவா

உடனடியாகத் தேவாவைக் கைது செய்த போலீஸார் தேவா மீது போக்ஸோ மற்றும் 506 (2) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு