Published:Updated:

``I'm going to death" - கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவி!

தற்கொலை ( சித்தரிப்புப் படம் )

பள்ளி மாணவி, கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

``I'm going to death" - கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவி!

பள்ளி மாணவி, கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
தற்கொலை ( சித்தரிப்புப் படம் )

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் கமல்ராஜ். இவர் வில்லிவாக்கத்தில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவரின் 16 வயதான மகள், அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், வழக்கம் போல நேற்று பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய மாணவி, புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவில் வீட்டுக்கு வந்த கமல்ராஜ், மகள் தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

தற்கொலை
தற்கொலை

பின்னர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் உதவியோடு அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல `108' ஆம்புலன்ஸுக்கு கமல்ராஜ் தகவல் தெரிவித்தார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மாணவியைப் பரிசோதித்தபோது அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அயனாவரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பவதாரணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலை குறித்து போலீஸார் விசாரித்தபோது சில தகவல்கள் வெளியாகின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மாணவி, தற்கொலை செய்வதற்கு முன்பு தன்னுடைய புத்தம் ஒன்றில் `iam going to death. it is all over finish' என்று எழுதி வைத்துள்ளார். அவர் எதற்காக அவ்வாறு எழுதினார் என்று விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் அவரின் அம்மா சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். அதனால் மனதளவில் மாணவி பாதிக்கப்பட்டிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 தற்கொலை!
தற்கொலை!
மாதிரிப் படம்

தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு ஒரு தம்பி உள்ளார். அவர், பள்ளி முடிந்து நேற்று டியூசனுக்குச் சென்றுவிட்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்தான் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.

பள்ளி மாணவி, கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism