Published:Updated:

ஆவடி: மாணவியைக் கிண்டல்செய்த விவகாரம் - அரசுப் பள்ளி மாணவர்மீது சரமாரித் தாக்குதல்!

அரசு பள்ளி மாணவர்கள்

தேர்வு எழுதவந்த கோணாம்பேடு அரசுப் பள்ளி மாணவி ஒருவரை, காமராஜர் நகர்ப் பள்ளியைச் சேர்ந்த மாணவன் ஒருவன் கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை, அந்த மாணவி தன் பள்ளியைச் சேர்ந்த சக மாணவர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

ஆவடி: மாணவியைக் கிண்டல்செய்த விவகாரம் - அரசுப் பள்ளி மாணவர்மீது சரமாரித் தாக்குதல்!

தேர்வு எழுதவந்த கோணாம்பேடு அரசுப் பள்ளி மாணவி ஒருவரை, காமராஜர் நகர்ப் பள்ளியைச் சேர்ந்த மாணவன் ஒருவன் கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை, அந்த மாணவி தன் பள்ளியைச் சேர்ந்த சக மாணவர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
அரசு பள்ளி மாணவர்கள்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உள்ள காமராஜ் நகர்ப் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்போது நடந்துவரும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக, அருகில் உள்ள கோணாம்பேடு அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் காமராஜர் நகர்ப் பள்ளியில்தான் தேர்வு எழுதி வருகிறார்கள்.

தாக்கிக்கொள்ளும் மாணவர்கள்
தாக்கிக்கொள்ளும் மாணவர்கள்

இந்த நிலையில், தேர்வு எழுதவந்த கோணாம்பேடு அரசுப் பள்ளி மாணவி ஒருவரை, காமராஜர் நகர்ப் பள்ளியைச் சேர்ந்த மாணவன் ஒருவன் கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை, அந்த மாணவி தன் பள்ளியைச் சேர்ந்த சக மாணவர்களிடம் தெரிவித்திருக்கிறார். தேர்வு முடிந்தபிறகு காமராஜர் நகர்ப் பள்ளியைச் சேர்ந்த சிபி அரசன் என்ற மாணவன் பள்ளி வாசலில் நின்றுக் கொண்டிருந்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது, தேர்வு முடிந்துவந்த கோணாம்பேடு அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் சிபி அரசனைச் சரமாரியாகத் தாக்கியிருக்கின்றனர். இதனைத் தடுக்கவந்த மாணவர்களையும் அவர்கள் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். இதில் மாணவன் சிபி மயக்கமடைந்தான். இதனையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அடிபட்ட சிபி சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறான்.

விசாரணை செய்யும் போலீஸார்
விசாரணை செய்யும் போலீஸார்

சம்பவமறிந்துவந்த ஆவடி பகுதி போலீஸார், மாணவர்கள் தாக்கிக்கொள்ளும் வீடியோவில் உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், காயமடைந்த மாணவனிடம் விசாரணை நடத்தியதில், ``அந்த வழியாகச் சென்ற மாணவியை யாரோ கிண்டல் செய்திருக்கிறார்கள். அதற்கு, எதுவுமே செய்யாத என்னைத் தாக்கிவிட்டனர்" எனக் கூறியிருக்கிறான். தேர்வெழுதவந்த இடத்தில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism